Published:Updated:

திருவாரூரில் கார் டிக்கியில் சிக்கிய 50 லட்சம் ரூபாய் - காவல்துறையினர் விசாரணை!

திருவாரூரில் கார் டிக்கியில் சிக்கிய 50 லட்சம் ரூபாய் - காவல்துறையினர் விசாரணை!
திருவாரூரில் கார் டிக்கியில் சிக்கிய 50 லட்சம் ரூபாய் - காவல்துறையினர் விசாரணை!

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலான பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்ற நடத்தை விதிமுறை தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில், திருவாரூரில் கார் டிக்கியில் வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாயை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் அருகே உள்ள கானூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகப்பட்டினத்திலிருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த விலையுயர்ந்த ஒரு சொகுசு கார் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதை சோதனை செய்து பார்த்தபோது டிக்கியில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதன் மதிப்பு ரூ.50,00,000. அதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த சாகுல் ஹமீது உள்ளிட்ட மூன்று பேரிடம் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களது சொந்த தேவைகளுக்காக பணம் எடுத்துச் சென்றார்களா அல்லது வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதற்காக அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் கொண்டு செல்லப்பட்டதா என்கிற தகவலை காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை.