Published:Updated:

`32 ஆண்டுக்கால சகோதரர் ரஜினியின் ஆசி எனக்கு உண்டு!' - ஏ.சி.சண்முகம்

`32 ஆண்டுக்கால சகோதரர் ரஜினியின் ஆசி எனக்கு உண்டு!' - ஏ.சி.சண்முகம்
`32 ஆண்டுக்கால சகோதரர் ரஜினியின் ஆசி எனக்கு உண்டு!' - ஏ.சி.சண்முகம்

‘‘தாமரை, இஸ்லாமியர்களுக்கு எதிரான சின்னம்தான்’’ என்று அ.தி.மு.க கூட்டணியில் கைகோத்திருக்கும் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். அவரின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. இது சம்பந்தமான பத்திரிகையாளர்கள் சந்திப்பு, வேலூரில் உள்ள ஏ.சி.சண்முகத்தின் நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க, த.மா.கா உள்பட அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய ஏ.சி.சண்முகம், ‘‘அ.தி.மு.க கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதியைக் கொடுத்திருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நேற்றிரவு அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள். என்னுடைய கட்சி, திராவிட இயக்கத்தைச் சார்ந்தது. தாமரை சின்னம், இஸ்லாமியர்களுக்கு எதிரான சின்னம்தான். ஆனாலும், இஸ்லாமிய சமூகத்தில் இரட்டை இலைக்கு சொந்தக்காரர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

அ.தி.மு.க வலுவான கூட்டணி அமைத்திருக்கிறது. ஒரு மாதத்திற்கு முன்பாகவே, ஆயிரம் பேரை வேலூர் தொகுதியில் இறக்கி, கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறோம். எங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும் என்று கணித்திருக்கிறோம். நடிகர் ரஜினிகாந்த் என்னுடைய 32 ஆண்டுக்கால சகோதரர். இந்தத் தேர்தலில் அவருடைய பங்களிப்பு இல்லை. ஆனால், ரஜினிகாந்த்தின் ஆசி எனக்கு உண்டு’’ என்று தெரிவித்தார்.