Published:Updated:

`மீண்டும் மோடி... வேண்டும் மோடி!’ - வித்தியாசமாக வழிபடும் வேலூர் பா.ஜ.க நிர்வாகிகள்

லோகேஸ்வரன்.கோ
`மீண்டும் மோடி... வேண்டும் மோடி!’ - வித்தியாசமாக வழிபடும் வேலூர் பா.ஜ.க நிர்வாகிகள்
`மீண்டும் மோடி... வேண்டும் மோடி!’ - வித்தியாசமாக வழிபடும் வேலூர் பா.ஜ.க நிர்வாகிகள்

`மீண்டும் மோடி... வேண்டும் மோடி’ என்ற முழக்கத்தை முன்வைத்து பா.ஜ.க நிர்வாகிகள், வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட்டுவருகிறார்கள்.

பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடியை முன்னிறுத்தியுள்ள பா.ஜ.க, தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் கூட்டணியை உருவாக்கியிருக்கிறது. சிறுபான்மை சமூகத்தினர் அதிகம் வசிக்கும் வேலூர் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜ.க-விற்கு வாக்குவங்கி குறைவு என்பதால், கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட பா.ஜ.க, அறிவுறுத்தியிருக்கிறது. இந்த நிலையில் டிக் டாக், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் அனைத்துக்கட்சிகள் மீதும் நெட்டிசன்கள் விமர்சனங்களை வாரி இறைக்கிறார்கள்.

விமர்சனங்களைக் கண்டுகொள்ளாத வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள், வித்தியாசமாக சில வேலைகளைச் செய்துவருகிறார்கள். வீடுகளில் தாமரை போன்று கோலமிட்டு அதில் கமல தீபம் ஏற்றி வழிபட்டுவருகின்றனர். மெழுகால் எரியக்கூடிய விளக்கைக் கோலத்திற்கு நடுவில் வைத்துள்ளனர். ``தேர்தல் முடியும்வரை, தினமும் மெழுகு விளக்கை எரியவிட்டு ‘மீண்டும் மோடி... வேண்டும் மோடி’ என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்’’ என்று கூறுகின்றனர். இதையறிந்த நெட்டிசன்கள், `ஆஹான்’ என்ற ஒற்றை வார்த்தையால் பா.ஜ.க நிர்வாகிகளை கலாய்த்துவருகின்றனர்.