Published:Updated:

தலைமையே அறிவிக்கவில்லை; அதற்குள்..? - திருவண்ணாமலையில் ஆட்டத்தைத் தொடங்கிய உ.பி-க்கள் 

தலைமையே அறிவிக்கவில்லை; அதற்குள்..? - திருவண்ணாமலையில் ஆட்டத்தைத் தொடங்கிய உ.பி-க்கள் 
தலைமையே அறிவிக்கவில்லை; அதற்குள்..? - திருவண்ணாமலையில் ஆட்டத்தைத் தொடங்கிய உ.பி-க்கள் 

கட்சி அறிவிப்பு வெளியிடும் முன்பே வேட்பாளரை உறுதி செய்து தி.மு.க-வினர் விளம்பரம் செய்து வருகின்றனர்.

தலைமையே அறிவிக்கவில்லை; அதற்குள்..? - திருவண்ணாமலையில் ஆட்டத்தைத் தொடங்கிய உ.பி-க்கள் 

தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல் மார்ச் 17-ம் தேதி வெளியிடப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே வேட்பாளர் இவர்தான் என உறுதி செய்து சுவர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க-வினர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகளுக்கிடையே கூட்டணித் தொகுதிகள் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த நிலையில், இன்று தி.மு.க கூட்டணியில் யார், யாருக்கு எந்தத் தொகுதிகள் எனக் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் பட்டிலை வெளியிட்டார் ஸ்டாலின். அதன்பிறகு செய்தியாளர்களிடம் அவர், வருகிற 17-ம் தேதி தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார். 

தலைமையே அறிவிக்கவில்லை; அதற்குள்..? - திருவண்ணாமலையில் ஆட்டத்தைத் தொடங்கிய உ.பி-க்கள் 

இந்த நிலையில், வேட்பாளர்களைக் கட்சி அறிவிக்கும் முன்பே இவர்தான் நம் வேட்பாளர் என்று உறுதியாகச் சுவர் விளம்பரங்களைச் செய்து வருகின்றனர் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க-வினர். திருவண்ணாமலையில் சி.என்.அண்ணாதுரை போட்டியிடவுள்ளதாக விளம்பரம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை எ.வ.வேலுவின் கோட்டை என்பதால் அவர் சொல்லித்தான் இந்த வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது என்கிறனர் தி.மலை தொகுதி தி.மு.க-வினர்.