Published:Updated:

`இப்படிப் பதிவுகள் போட்டு மக்களை குழப்பிக்கிட்டு இருக்காங்க!' - சீறும் தஞ்சை தி.மு.கவினர்

`இப்படிப் பதிவுகள் போட்டு மக்களை குழப்பிக்கிட்டு இருக்காங்க!' - சீறும் தஞ்சை தி.மு.கவினர்
`இப்படிப் பதிவுகள் போட்டு மக்களை குழப்பிக்கிட்டு இருக்காங்க!' - சீறும் தஞ்சை தி.மு.கவினர்

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் பெயர் இன்னும் யாரும் அறிவிக்கப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் வந்துகொண்டிருக்கும் வாழ்த்துச் செய்தியால் தஞ்சை மக்கள் குழம்பிப் போனார்கள்.

`இப்படிப் பதிவுகள் போட்டு மக்களை குழப்பிக்கிட்டு இருக்காங்க!' - சீறும் தஞ்சை தி.மு.கவினர்

தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் கிருஷ்ணசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, எல்.ஜி. அண்ணா உள்ளிட்ட சிலர் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள். இந்நிலையில் இன்று முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்அடுத்தடுத்து வந்த வாழ்த்துச் செய்திகளால் தஞ்சை மக்களும் தி.மு.க-வினரும் குழப்பமடைந்தார்கள். தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணன் பழனிமாணிக்கம் வெற்றி பெற வாழ்த்துகள் என முகநூலில் பதிவுகள் வந்தன. பழனிமாணிக்கத்திற்கு சீட் வழங்கப்பட்டு விட்டதாக பலரும் நினைத்தார்கள். இவர் வெற்றி பெறுவாரா என்பதற்கான சாதக, பாதகங்கள் குறித்து பலரும் சூடாக விவாதிக்கத் தொடங்கினார்கள்.

இதற்கிடையே தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகேஷ் கிருஷ்ணசாமி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெற வாழ்த்துகள் என முகநூலிலும் வாட்ஸ் அப்களிலும் பதிவுகள் வெளியாகின. எதுதான் உண்மை? யார்தான் வேட்பாளர் என பரபரப்பான விசாரிப்புகள் நடைபெற்றன. தஞ்சை தி.மு.க சீனியர் உடன்பிறப்புகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, ``மார்ச் 17-ம் தேதி தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்னு தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவிச்சிட்டார். இதற்கிடையில் இந்த இரண்டு பேருடைய ஆதரவாளர்களும் ஆர்வக்கோளாறுல இப்படிப் பதிவுகள் போட்டு மக்களை குழப்பிக்கிட்டு இருக்காங்க. இது தேவையில்லாத வேலை. தங்களோட விசுவாசத்தை இப்படியா வெளிப்படுத்துறது” என ஆதங்கப்பட்டார்.