Published:Updated:

‘வேலூர் மாவட்டத்தில் 1,164 துப்பாக்கிகள்!’ -19-ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு

லோகேஸ்வரன்.கோ
‘வேலூர் மாவட்டத்தில் 1,164 துப்பாக்கிகள்!’ -19-ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு
‘வேலூர் மாவட்டத்தில் 1,164 துப்பாக்கிகள்!’ -19-ம் தேதிக்குள் ஒப்படைக்க உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்று, 1,164 துப்பாக்கிகளை வைத்துள்ளவர்கள், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துவருகின்றனர்.

தமிழகத்தில், அடுத்த மாதம் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. இதன் காரணமாக, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தேர்தல் நேரத்தில் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக, உரிமம் பெற்று துப்பாக்கிவைத்துள்ளவர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ள தொழிலதிபர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் வியாபாரிகள் என மொத்தம் 1,164 பேர், வரும் 19-ம் தேதிக்குள் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து,  போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைத்துவருகிறார்கள். 

இதுவரை, 600-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளனர். தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் துப்பாக்கிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி பாதுகாப்புக்கு பெறப்பட்ட 246 துப்பாக்கிகளை ஒப்படைக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக,உரிமம் பெற்ற சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.