Published:Updated:

`விவசாயம், தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்துப் பிரசாரம்' - திருப்பூர் வேட்பாளர் சுப்பராயன்!

`விவசாயம், தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்துப் பிரசாரம்' - திருப்பூர் வேட்பாளர் சுப்பராயன்!
`விவசாயம், தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்துப் பிரசாரம்' - திருப்பூர் வேட்பாளர் சுப்பராயன்!

விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்துத் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ளப்போவதாகத் திருப்பூரில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சுப்பராயன் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் தொகுதிப் பங்கீடு உடன்பாடுகளை முடித்துக்கொண்டு வேட்பாளர்களையும் அறிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தி.மு.க கூட்டணி சார்பில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் சுப்பராயன் போட்டியிடுகிறார். அதற்கான அறிமுகக் கூட்டம் திருப்பூர் தி.மு.க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த வேட்பாளர் சுப்பராயன், ``திருப்பூரில் 30 சதவிகித தொழில்துறை நலிவடைந்திருக்கிறது. சிறு குறு தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கின்றன. மாவட்டத்தில் 3 - ல், 2 பங்கு விவசாயம் முடிந்துபோய்விட்டது. கடந்த தேர்தலில் மோடி வென்றால் திருப்பூர் சொர்க்கமாக மாறும் என பிரசாரம் செய்தார்கள். ஆனால், தற்போது திருப்பூர் சுடுகாடாக மாறியிருக்கிறது. மத்திய பா.ஜ.க அரசையும், மாநில அ.தி.மு.க அரசையும் அப்புறப்படுத்தி இந்தியாவை காப்பாற்றப் போகிற தேர்தல் இது. திருப்பூரை மீட்டெடுக்கும் வகையில் விவசாயம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை முன்வைத்து வரும் தேர்தலில் என்னுடைய பிரசாரத்தை மேற்கொள்ளப்போகிறேன் என்று தெரிவித்தார்.