Published:Updated:

கடலூர் தொகுதியில் தி.மு.க-வில் களம் காணும் பண்ருட்டி முந்திரி தொழிலதிபர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ்!

கடலூர் தொகுதியில் தி.மு.க-வில் களம் காணும் பண்ருட்டி முந்திரி தொழிலதிபர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ்!
கடலூர் தொகுதியில் தி.மு.க-வில் களம் காணும் பண்ருட்டி முந்திரி தொழிலதிபர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ்!

கடலூரில் தி.மு.க வேட்பாளராக பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி தொழிலதிபர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷ் (49) அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

பட்டதாரியான இவர் முந்திரி ஏற்றுமதி மற்றும் இறங்குமதி தொழில் செய்து வருகிறார். தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர்கள் சங்க மாநிலத் தலைவராக உள்ளார். தி.மு.க-வில் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளராகவும் இருக்கிறார். இவருக்கு உஷா என்ற மனைவியும்,  காயத்திரி, ஸ்ரீநிதி, கண்மணி ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர். கடலூர் நாடாளுமன்றத் தொகுதி கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.

கடலூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. குழந்தை தமிழரசன், சென்ற தேர்தலில் போட்டியிட்ட டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் மருமகன் டாக்டர் நவீன், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன், தங்க ஆனந்தன், டி.வி. வெங்கட்ராமன் உட்பட ஏராளமானவர்கள் பெயர்  அடிப்பட்டாலும் பண்ருட்டி முந்திரி தொழிலதிபர் டி.ஆர்.வி.எஸ். ரமேஷை வேட்பாளராகத் தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க கடலூரில்  போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.