``அம்மாவுக்குச் செய்த துரோகம்தான் உங்கள் தோல்விக்குக் காரணம்!” - ராஜகண்ணப்பனை விமர்சித்த அமைச்சர் | Minister Speech in h.raja meeting

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (23/03/2019)

கடைசி தொடர்பு:09:50 (23/03/2019)

``அம்மாவுக்குச் செய்த துரோகம்தான் உங்கள் தோல்விக்குக் காரணம்!” - ராஜகண்ணப்பனை விமர்சித்த அமைச்சர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அ.தி.மு.க கூட்டணிக்கட்சி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க கட்சியின் வேட்பாளர் ராஜாவை ஆதரித்து காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கான ஊழியர் கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தே.மு.தி.க, பா.ம.க, த.மா.க, புதிய தமிழகம் போன்ற கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.

 

அமைச்சர் பாஸ்கரன்

அப்போது பேசிய அமைச்சர் பாஸ்கரன், ``சிவகங்கை எம்பியாக ராஜாவையும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினராக நாகராஜனையும் ஜெயிக்கவைக்காமல் உங்கள்(முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி) முகத்தில் முழிக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டு நானும் மாவட்டச் செயலாளரும்  வந்திருக்கிறோம். ராஜகண்ணப்பன் எம்பி சீட் கிடைக்கவில்லை என்று தி.மு.கவுக்குப் போயிருக்கிறார். அவர் எம்.பியாக நின்றபோது வெற்றிபெற்றதாக அறிவித்தும் கூட அவர் எம்.பியாக முடியவில்லை. அந்த வழக்கு இன்னும் முடியவில்லை. அதற்குள் யாரை எதிர்த்து வழக்கு போட்டோமோ அவர்களுக்காக வேலை செய்யப் போய்விட்டார். இவர் அம்மாவிற்குச் செய்த துரோகம் தான் நாடாளுமன்றத்திலேயும் சட்டமன்றத்திலும் ஜெயிக்கமுடியல. யாதவர்கள் எல்லாம் நான் சொல்லுவதைத்தான் கேட்பார்கள் என்று சொல்லுவது எல்லாம் அந்தக் காலம். இன்னும் எத்தனை வருசம்தான் சொல்லுவாருனு தெரியவில்லை. இனிமேல் அவருக்கெல்லாம் செல்ப் எடுக்காது” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க