Published:Updated:

`கட்சி கொள்கை வேறு; கூட்டணி வேறு!’ - அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

`கட்சி கொள்கை வேறு; கூட்டணி வேறு!’ - அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
`கட்சி கொள்கை வேறு; கூட்டணி வேறு!’ - அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

கட்சி கொள்கை வேறு, கூட்டணி வேறு என அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேசினார். 

காட்டுமன்னார்கோயிலில் சிதம்பரம் தொகுதி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் அ.தி.மு.க சார்பில் 
போட்டியிடும் வேட்பாளர் சந்திரசேகரன் அறிமுகக் கூட்டம் நடந்தது. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்  அருண்மொழித்தேவன் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரன்,  கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உட்படப் பலரும் கலந்துகொண்டனர். 

 
கூட்டத்தில் பேசிய அ.தி.மு.கவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ``அ.தி.மு.க அமைத்துள்ள வெற்றிக் கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல் எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின்  பேசிவருகிறார். முதலில் ஸ்டாலினுக்கு கட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதி இருக்கிறதா?. வரலாறு தெரியாமல்  பேசக் கூடாது. இந்திரா காந்தியை எதிர்த்த கருணாநிதி, `நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’  எனக் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். பண்டாரங்களும், பரதேசிகளும் ஆள்வதா எனக் கூறிய 
கருணாநிதி பின்னர் பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். கட்சி கொள்கை வேறு, கூட்டணி வேறு. இதனை ஸ்டாலின் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இதனைப் புரிந்துகொள்ளாமல் அரைவேக்காடுத்தனமாக பேசிவருகிறார். ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. ஏழை, எளிய மக்களுக்காக எம்.ஜி.ஆர் தோற்றுவித்த இயக்கம் அ.தி.மு.க. இந்த ஆட்சி போய்விடும் என ஸ்டாலின் கனவு கண்டார். அது நடக்கவில்லை. அதனால் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். மோடி ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. பாதுகாப்பான நாடாகவும் உள்ளது. இந்தியாவை ஆளும் தகுதி மோடி ஒருவருக்கு மட்டுமே உண்டு. எனவே இரட்டை இலை சின்னதிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்’’ இவ்வாறு அவர் பேசினார்.