`சீட் கொடுத்த ரகசியம் தெரியல, ஆனால் இது நிச்சயம் நடக்கும்!'- கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக சுதர்சன நாச்சியப்பன் | Chithambaram don't want rahul to be in prime minister post, says sudarsana natchiappan

வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (25/03/2019)

கடைசி தொடர்பு:09:34 (26/03/2019)

`சீட் கொடுத்த ரகசியம் தெரியல, ஆனால் இது நிச்சயம் நடக்கும்!'- கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக சுதர்சன நாச்சியப்பன்

 

சிதம்பரம்

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் சிக்கல் நீடித்தது. பதவியில் இருப்பவர்கள் குடும்பத்தினர் யாருக்கும் எம்.பி சீட் இல்லை என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருந்தார். அதனால்தான் கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்க முடியாது  என்று காங்கிரஸ் தலைமை கறார் காட்டியது. இதன் விளைவாகத்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தலைமையின் கொள்கை முடிவை ஊடகங்களிடம் தெரிவித்தார். கட்சித் தொண்டர்கள் மற்றும் எதிர்க் கட்சியினர் அனைவரும் சிதம்பரம் குடும்பத்திலிருந்து வேட்பாளர் இல்லை. புதிதாக வேறு ஒரு நபர் வேட்பாளராகக் களமிறங்கப் போகிறார் என்றே நினைத்தனர். அதனாலேயே, வேட்பாளர்கள் பற்றிய யூகங்கள் ஓடத் தொடங்கின. இந்த நிலையில், திடீரென கார்த்தி சிதம்பரம் தான் வேட்பாளர் என அறிவிப்பு வெளியானது.

சுதர்சன நாச்சியப்பன்


வேட்புமனு தாக்கல் செய்வதற்காகவும் தி.மு.க தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டுப் போவதற்காக சென்னை வந்த சுதர்சன நாச்சியப்பன் அதிர்ச்சியானார். என்னை தொகுதிக்குப் போய் வேட்புமனு செய்யச் சொல்லிவிட்டு, திடீரென இப்படியொரு முடிவு ஏன்? எனக் குழப்பத்தில் இருக்கிறார் சுதர்சன நாச்சியப்பன். ``மக்கள், சிதம்பரம் குடும்பத்தின்மீது வெறுப்பில் இருக்கிறார்கள். அதான் கடந்த முறை டெப்பாசிட் காலியானார் கார்த்தி சிதம்பரம். இந்த முறை காங்கிரஸ் அவருக்கு ஒரு சீட் கொடுத்து வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது. தொகுதியின் வளர்ச்சிக்காகப் பாடுபடாமல், வெளிநாடுகளில் பல்வேறு இடங்களில் சொத்துக்களைச் சேர்த்திருக்கிறார்கள் சிதம்பரம் குடும்பத்தினர். ஏர்செல் மேக்சிஸ் ஊழல் குற்ற வழக்கு  இருக்கும் இவர்களுக்கு,  கட்சியில் சீட் கொடுத்ததன் ரகசியம் என்னவென்று தெரியவில்லை. ராகுல் காந்தி பிரதமராகக் கூடாது என்று நினைப்பவர் சிதம்பரம். அப்படிப்பட்டவர் குடும்பத்திற்கு மீண்டும் சீட் கொடுத்திருப்பது வேதனையாக இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி அழிந்துபோய் விட்டது. கார்த்தி சிதம்பரம் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைவார். அது நிச்சயம் நடக்கும்” என்கிறார்  சுதர்சன நாச்சியப்பன்

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க