`உலக நாடக தினத்தில் பிரதமருக்கு வாழ்த்துகள்!'- மோடியை விமர்சித்த ராகுல் காந்தி | Rahul Gandhi made a dig at Prime Minister's satellite announcement

வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (27/03/2019)

கடைசி தொடர்பு:19:56 (27/03/2019)

`உலக நாடக தினத்தில் பிரதமருக்கு வாழ்த்துகள்!'- மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் நாடு முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியை எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளை ஆளும் கட்சியும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்வதே பிரசார உரையில் முக்கிய அம்சங்களாக உள்ளன. 

ராகுல் காந்தி

இந்தச் சூழலில் பிரதமர் மோடி, இன்று காலை திடீரென ஆற்றிய உரையில், ``இந்தியா மிகப்பெரும் வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. பூமிக்கு 300 கி.மீ. உயரத்தில் ஒரு செயற்கைக்கோளை மூன்று நிமிடங்களில் 'ஏ-சாட் ஏவுகணை' மூலம் இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. இதன்மூலம் நம் நாடு விண்வெளி சக்திமிக்க நாடாக பதிவு செய்துகொண்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து இந்தியா, இந்தச் சாதனையைப் புரிந்துள்ளது" என்றார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

பிரதமரின் திடீர் அறிவிப்பைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், ``பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன (DRDO) அதிகாரிகளுக்குப் பாராட்டுகள். உங்களின் பணியால் பெருமையடைகிறோம். அதேநேரத்தில், உலக நாடக தினத்தில் பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்" பதிவிட்டுள்ளார்.

இது, பிரதமர் மீதான ராகுல் காந்தியின் விமர்சனமாகும். தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இதுபோன்ற உரையைப் பிரதமர் வெளியிடலாமா என பரவலாகக் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் இந்த ட்விட்டர் பதிவு குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க