செல்லாத வாக்குகள் இல்லாத 2004 நாடாளுமன்றத் தேர்தல்! | 2004 parliamentary election without invalid votes...

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (27/03/2019)

கடைசி தொடர்பு:09:45 (28/03/2019)

செல்லாத வாக்குகள் இல்லாத 2004 நாடாளுமன்றத் தேர்தல்!

தேர்தல்

செல்லாத வாக்குகள் பதிவாகாத முதல் தேர்தலாக 2004 நாடாளுமன்றத் தேர்தல் அமைந்தது. அந்த தேர்தலில்தான் முதன்முறையாக இந்தியாவின் 543 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் இந்தத் தேர்தல் செல்லாத வாக்குகள் இல்லாத தேர்தலாக அமைந்தது. இந்தத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. 2004 எம்.பி. தேர்தலுக்கு முன்பு வரையில் வாக்குச் சீட்டு முறையில்தான் தேர்தல்கள் நடைபெற்று வந்தன. வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்பட்டபோது செல்லாத வாக்குகள் லட்சக்கணக்கில் பதிவாகின. இந்த செல்லாத வாக்குகள் சில வேட்பாளர்கள் வாக்கு  வங்கியை வெகுவாக சரித்தது.

குறிப்பாக வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற 1999 நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் 4,36,189 செல்லாத வாக்குகள் பதிவானது. திண்டிவனம், திருச்செங்கோடு, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம.தி.மு.க. வேட்பாளர்களும் கரூர், தென்காசி தொகுதிகளில் வென்ற அ.தி.மு.க. வேட்பாளர்களும் செல்லாத வாக்குகளைக் காட்டிலும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.