Published:Updated:

`இந்த வேட்பாளர் சிறப்பாகச் செயல்படுவார், ஓட்டு போடுங்கள்!'- சிதம்பரத்தில் ஓ.பி.எஸ் பிரசாரம்

`இந்த வேட்பாளர் சிறப்பாகச் செயல்படுவார், ஓட்டு போடுங்கள்!'- சிதம்பரத்தில் ஓ.பி.எஸ் பிரசாரம்
`இந்த வேட்பாளர் சிறப்பாகச் செயல்படுவார், ஓட்டு போடுங்கள்!'- சிதம்பரத்தில் ஓ.பி.எஸ் பிரசாரம்

``சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் எங்கள் கட்சியின் வேட்பாளர் சந்திரசேகருக்கு வாக்களித்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டால் தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்னைக்களுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பாகச் செயல்படுவார்" என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். 

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் பா.ம.க வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடலூர் ரெட்டிச்சாவடி, உழவர் சந்தை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். தொடர்ந்து சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகருக்கு வாக்கு கேட்டு பரங்கிப்பேட்டையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், ``இந்தத் தொகுதியில் போட்டியிடும் எங்கள் கட்சியின் வேட்பாளர் சந்திரசேகருக்கு வாக்களித்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டால் தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்னைக்களுக்கு தீர்வு காணும் வகையில் சிறப்பாகச் செயல்படுவார். மக்களின் அடிப்படைத் தேவைகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர் உட்பட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவார். இந்தத் தேர்தலில் நல்லவர்கள் ஒரு கூட்டணியாகவும், அதர்ம கொள்கை கொண்டவர்கள் ஒரு கூட்டணியாகவும் போட்டியிடுகின்றனர். கடந்த 2009-ல் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது இலங்கை அரசு தமிழர்களை கொன்று குவித்தது. அதைத் தடுக்க தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தி.மு.க ஆட்சியில் இருந்த போது காவிரியில் கர்நாடகா நான்கு அணைகளை கட்டியது. அப்பொழுது முதல்வராக இருந்த கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை. பின்னர் ஜெயலலிதா முதல்வரானவுடன் உச்ச நீதிமன்றம் சென்று காவிரிப் பிரச்னைக்கு தீர்வு கண்டார். அ.தி.மு.க ஆட்சியில் பொது மக்களுக்கு ஏராளமான நல்ல பல திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இந்தத் திட்டங்களை தற்போதைய முதல்வர் எடப்பாடியும் சிறப்பாகச் செய்து வருகிறார். சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக ஜெயலலிதா திகழ்ந்தார்'' என்று பேசினார்