கமல் அளித்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏழு உறுதிமொழிகள்! | General Elections 2019: Seven pledges of the Makkal Needhi Maiam

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:22 (29/03/2019)

கமல் அளித்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏழு உறுதிமொழிகள்!

டைபெற இருக்கும் 17-வது நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட வளர்ந்த கட்சிகளுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடுகிறது. அவருடைய கட்சியுடன் செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சியும், வளரும் தமிழகமும் கூட்டணி அமைத்துள்ளன. அக்கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு, பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறார். அதில், ஏழு உறுதிமொழிகளையும் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அந்த ஏழு உறுதிமொழிகளையும் தன் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

கமல்

1. ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வசதியை ஐந்து ஆண்டுகளில் வழங்கப்பட்டு தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் அவலம் அகற்றப்படும்.

2. ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் பேருக்கு வேலை. இதற்காக 500 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

3. வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் அறுபது லட்சம் குடும்பங்களின் வறுமையை அகற்றுவோம். குடிசைகள் இல்லா தமிழகம் காண்போம்.

4. தமிழகத்தின் மொத்த பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த விவசாயம் மற்றும் தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும்.

5. பெண்களுக்கு விவசாயம் உட்பட அனைத்துத் துறைகளிலும் ஆணுக்கு நிகரான ஊதியம் வழங்கப்படும்.

6. உலகம் முழுக்க பரவியிருக்கும் தமிழர்களை ஒன்றுசேர்த்து அவர்களின் உரிமைகளைக் காப்போம். 

7. ஊழலுக்கு எதிராக இருக்கும் பல் இல்லா லோக் ஆயுக்தா சட்டத்தை இன்னும் வலுவாக்கி, லோக் ஆயுக்தா அதிகாரிகளை நியமிப்போம்.  
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க