ஆரத்தி தட்டுக்கு ரூ.2,000 பணம்! - கனிமொழி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு | Case filed against Kanimozhi over election model code of conduct

வெளியிடப்பட்ட நேரம்: 22:22 (28/03/2019)

கடைசி தொடர்பு:10:40 (30/03/2019)

ஆரத்தி தட்டுக்கு ரூ.2,000 பணம்! - கனிமொழி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு

தேர்தல் விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் அடிப்படையில் தூத்துக்குடி மக்ககவை தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி மற்றும் அக்கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர்  அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

கனிமொழி

தூத்துக்குடியில் மக்களவைத் தொகுதியில் தி.மு.க., சார்பில் மாநிலங்களவை எம்.பி-யும் மாநில மகளிரணிச் செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். இந்த நிலையில்,  வேட்பாளர் கனிமொழி வாக்காளர்களைச் சந்திக்கும்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது அவருடன் வரும் தி.மு.க. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான  அனிதா ராதாகிருஷ்ணன் ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு ரூ.2,000 கொடுப்பதுபோல உள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இது தொடர்பாக மீடியாக்களில் வீடியோவுடன்  செய்தியும் வெளியானது. இதற்கிடையே தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறி, திருச்செந்தூர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுக்கும்போது பணம் கொடுத்ததாக தேர்தல் பறக்கும்படை தாசில்தார் முத்துராமலிங்கம் திருச்செந்தூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், இதுதொடர்பாக தி.மு.க., தெற்கு மாவட்டச் செயலாளர் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க., வேட்பாளர் கனிமொழி உட்பட 8 பேர் மீது 143, 171(ஹெச்), 171(இ) ஆகிய பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ஆய்வாளர் முத்துராமன் விசாரணை நடத்தி வருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க