கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்! - அமலாக்கத்துறை நடவடிக்கை | ED has attached Karti Chidambaram property over Rs 22 crore in a graft case related to INX Media case

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (29/03/2019)

கடைசி தொடர்பு:11:02 (30/03/2019)

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்! - அமலாக்கத்துறை நடவடிக்கை

கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கார்த்தி

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்குச் சாதகமாக வெளிநாட்டு முதலீடுகளுக்கு, விதிமுறைகளை மீறி தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ என இரண்டு விசாரணை அமைப்புகளும் வழக்கு பதிவு செய்திருந்தன. இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கோரி வந்தது. ஆனால், நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன் அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி அளித்தது. இதற்கிடையே, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

கார்த்தி

ரூ.22.28 கோடி மதிப்புள்ள அவரின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல் வழக்கில் தொடர்புடைய மூன்று நிறுவனங்களின் சொத்து மதிப்புகளையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் களமிறங்கியுள்ளார். இதற்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க