மதுரைத் தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட வேட்பாளர் வெங்கடேசன்! | Madurai CPM candidate su venkadesan releases exclusive election manifesto for the Constituency

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (30/03/2019)

கடைசி தொடர்பு:22:42 (31/03/2019)

மதுரைத் தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட வேட்பாளர் வெங்கடேசன்!

மதுரை நாடாளுமன்றத் தொகுதி சி.பி.எம். வேட்பாளர் சு.வெங்கடேசன், மதுரைத் தொகுதிக்கான தனித்தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார். இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லக்கண்ணு உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மதுரைத் தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை  வெளியிட்ட வேட்பாளர் வெங்கடேசன்!

'வரலாறு - வளர்ச்சி- நவீனம்' என்ற தலைப்பில் அமைந்துள்ள தொகுதிக்கான தேர்தல் அறிக்கை பற்றி விளக்கிப் பேசிய வேட்பாளர் சு.வெங்கடேசன், ``மதுரையை வரலாற்று பாரம்பர்யமிக்க நகரமாக உலக அளவில் கொண்டு செல்லவும், மதுரையின் வரலாற்று ஆதாரங்கள் கீழடியைச் சுற்றியுள்ள கிராமங்களின் அடியில் புதைந்து கிடக்கிறது. அதை வெளிப்படுத்தவும், கண்டுபிடிக்கப்படும் ஆதாரங்களை காட்சிப்படுத்தவும் முயற்சி எடுப்பேன்.

அதுபோல் மதுரை உலக அளவில் சுற்றுலா நகரமாக மாற்றவும், மகாத்மா காந்தியின் அரையாடை அணிந்ததற்கான நினைவுச் சின்னம் உருவாக்கப்படும். மதுரைக்கு மெட்ரோ ரயில் வசதி, கூடுதல் ரயில் சேவைகள், மதுரை- தூத்துக்குடி தொழில் வளச்சாலை அமைத்தல், விமான சேவை விரிவாக்கம், ரப்பர் தொழில் பூங்கா, பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துதல், வைகையைப் பாதுகாத்தல், மதுரையில் உயர் கல்வி நிலையங்களைக் கொண்டு வருதல், நவீன மதுரைக்கான அனைத்து திட்டங்களையும் கொண்டுவர பெரு முயற்சி எடுப்பேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க