Published:Updated:

`அடுத்து பேரனையும் அரசியலுக்கு கொண்டுவந்து விடுவார் ஸ்டாலின்!'- முதல்வர் எடப்பாடி பிரசாரம்

`அடுத்து பேரனையும் அரசியலுக்கு கொண்டுவந்து விடுவார் ஸ்டாலின்!'- முதல்வர் எடப்பாடி பிரசாரம்
News
`அடுத்து பேரனையும் அரசியலுக்கு கொண்டுவந்து விடுவார் ஸ்டாலின்!'- முதல்வர் எடப்பாடி பிரசாரம்

`அடுத்து பேரனையும் அரசியலுக்கு கொண்டுவந்து விடுவார் ஸ்டாலின்!'- முதல்வர் எடப்பாடி பிரசாரம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஹெச்.ராஜாவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தபோது காளை மாடு கூட்டத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ``மத்தியில் நிலையான ஆட்சி அமைய ஹெச்.ராஜாவுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இனி எந்தக் காலத்திலும் தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என்று பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தற்போது அவரது கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அப்படி என்றால் ம.தி.மு.க-வுக்கும் ஸ்டாலின் தான் தலைவரா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், நான் படிப்படியாக பல்வேறு பதவிகளை வகித்து இந்த இடத்துக்கு வந்தவன். மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியால் இந்தப் பதவிக்கு வந்தவர். எதற்கெடுத்தாலும் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறும் ஸ்டாலினாலா நான் முதல்வராக வந்தேன். மக்களால் முதல்வரானேன். வாரிசு அரசியலை மாற்றி சாதாரண தொண்டர்கூட  முதல்வராக முடியும் என்பதை அ.தி.மு.க செய்துள்ளது. இனி விவசாயிதான் தமிழகத்தில் தொடர்ந்து முதல்வராக இருப்பார்கள். என்னை மண்புழு என ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின் வைரஸ் போல் உள்ளார். மண்புழு உரம் விவசாயத்துக்கு நல்லது. அதுபோல் நான் விவசாயிகளின் நண்பன்'' என்றார்.

இவர் எஜமான் வீட்டு பிள்ளையா, முதல்வர், பிரதமரை அவதூறாகப் பேசுகிறார். யாரையும் மதித்துப் பேச வேண்டும். ஒரு கட்சியை விமர்சிக்க எல்லை உண்டு. எங்களுக்கும் நாக்கு உள்ளது. நீங்கள் அவதூறாக பேசினாலும் நாங்களும் பதில் தர தயாராகிவிட்டோம். ஸ்டாலின் கொள்ளைப்புறமாக தலைவர் பதவிக்கு வந்தவர் எனப் பேசி கொண்டிருந்தபோது காளை மாடு உள்ளே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதைப் பார்த்த முதல்வர், மாட்டை சாதாரணமானவர்கள்போல் ஏய் என்று சத்தம் போட்டு விரட்டினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பின்னர் பேசிய முதல்வர், ``சீறிவரும் காளைகூட நம்மை பார்த்ததும் அன்பாகச் செல்கிறது. அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி மீது இருந்த தடையை எங்கள் அரசு தான் நீக்கியது. நேற்று வீரமிக்க பேசியவர் இன்று என்னாச்சு, வருமான வரி சோதனையில் சிக்கியுள்ளார். கருணாநிதி சிலை திறக்க பல்வேறு தலைவர்கள் வந்தனர். அப்போது ஸ்டாலின்  ராகுல்காந்தியை பிரதமராக ஏற்பதாக கூறிய சில நேரங்களில் சந்திரபாபுநாயுடு, ஸ்டாலினின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என கூறினார். மேற்குவங்கம் சென்றவர் ராகுல்காந்தியை பிரதமராக அறிவிக்கவில்லை. நேரத்துக்கு ஏற்ற மாதிரி ஸ்டாலின் மாற்றிப் பேசுகிறார்.

ஸ்டாலினை நம்பியதால் காங்கிரஸ் கட்சி பரிதாபமான நிலையில் உள்ளது. தமிழகத்துக்கு ப.சிதம்பரம் கடைக்கண் பார்த்து இருந்தாலே தமிழகம் நல்ல இடத்துக்கு வந்திருக்கும். நிதியமைச்சராக இருந்து இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் இதுவரை எதுவும் செய்யாதவர் இனி உங்களுக்கா நன்மை செய்ய உள்ளார். தன் மகனையும் எம்.பியாக்கி அமைச்சராக்க ப.சிதம்பரம் ஆசைப்படுகிறார். மக்களுக்கு எதுவும் செய்யாதவருக்கு நீங்கள் எதற்கு வாக்களிக்க வேண்டும்.

உதயநிதி ஸ்டாலினால் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை. அவருக்கு வியர்வையை துடைக்க ஒருவர். இது ராஜா பாரம்பரையா. ஒவ்வொருவராக ஆட்சிக்கு வர. ஸ்டாலின் மகன் மட்டுமல்ல பேரன் வந்தாலும் ஆட்சிக்கு வரமுடியாது. பேரனையும் அரசியலுக்கு ஸ்டாலின் தயார் செய்து விடுவார். எந்த ராஜாவாலும் இங்கே எங்களை வெற்றி பெறமுடியாது''  என்று பேசினார்.