கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது ஏன்?- முதல்வர் நாராயணசாமி விளக்கம்   | why Rahul gandhi contest from Wayanad in Kerala

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:38 (03/04/2019)

கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவது ஏன்?- முதல்வர் நாராயணசாமி விளக்கம்  

ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடுவது ஏன் என்பதற்கான காரணத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி பிரசாரம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியில், தலைமை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, “மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்படும் என ராகுல் காந்தி கூறியிருப்பதன்மூலம் அவர் புதுச்சேரி மக்கள்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. அதற்காக, புதுச்சேரி மக்கள் சார்பில் ராகுல் காந்திக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

'நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில், நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்' என்று தெரிவித்திருப்பதற்கும் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்திருப்பதன் மூலம் நாட்டில் வறுமை ஒழிவதோடு, பட்டினி என்ற நிலையே இருக்காது. இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். மேலும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும்'' என்றார்.

தொடர்ந்து, ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடுவதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், ”நரேந்திர மோடி ஒட்டுமொத்தமாகத் தென் மாநிலங்களைப் புறக்கணிக்கிறார். அதனால்தான், ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிடுகிறார்” என்றார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க