`பண மூட்டைகளை வைத்து சிக்கவைக்கத் திட்டம்' - ஆளும் கட்சிமீது குற்றம் சாட்டும் டி.டி.வி.தினகரன்! | The ruling party conspired to block the by election says T.T.V. Dinakaran

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:39 (03/04/2019)

`பண மூட்டைகளை வைத்து சிக்கவைக்கத் திட்டம்' - ஆளும் கட்சிமீது குற்றம் சாட்டும் டி.டி.வி.தினகரன்!

'18 தொகுதிகளில் இடைத் தேர்தலைத் தடுக்க ஆளும் கட்சியினர் சதித் திட்டம்'  என டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தினகரன்

நீலகிரி தனித் தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் ராமசாமி வேட்பாளராகக் களமிறங்குகிறார். நீலகிரி தொகுதியில் தி.மு.க சார்பில் ஆ.ராசாவும், அ.தி.மு.க. சார்பில் தியாகராஜனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், அ.ம.மு.க வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்ய டி.டி.வி. தினகரன் ஊட்டி வந்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "அ.தி.மு.க பக்கம் தொண்டர்கள் இல்லை. அவர்கள் டெண்டர்களை நம்பியே உள்ளனர். வேன்களில் பணத்தை வைத்துக்கொண்டு வாக்காளர்களுக்கு வழங்க முயன்றுவருகிறார்கள். 

 அவர்களுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வினர் டெபாசிட் இழக்க நேரிடும். உளவுத்துறை மற்றும் காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு சாதிக்கலாம் என நினைக்கிறார்கள். அ.ம.மு.க வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குச் சொந்தமான இடங்களில் பண மூட்டைகளை வைத்து சிக்கவைக்க சதித்திட்டம் தீட்டுகின்றனர். இவர்களின் நோக்கம் 18 சட்டமன்ற இடைத் தேர்தலை நடைபெறவிடாமல் செய்ய வேண்டும். அதற்காக, எத்தகைய செயலிலும் ஆளும் கட்சியினர் ஈடுபடுவார்கள்" என்றார்.