Published:Updated:

வி.சி.க வணிகர் அணியின் செயலாளரைக் குறிவைத்து ஐ.டி ரெய்டு!

வி.சி.க வணிகர் அணியின் செயலாளரைக் குறிவைத்து ஐ.டி ரெய்டு!
வி.சி.க வணிகர் அணியின் செயலாளரைக் குறிவைத்து ஐ.டி ரெய்டு!

விடுதலைச் சிறுத்தைகள் வணிகர் அணி மாநில துணைச் செயலாளர் அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வி.சி.க வணிகர் அணியின் செயலாளரைக் குறிவைத்து ஐ.டி ரெய்டு!
பெரம்பலூரை அடுத்துள்ள பேரளி கிராமம்  வழியே அரியலூரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த காரை நிறுத்தி, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, காருக்குள் நூதன முறையில் மறைத்து வைத்திருந்த கரன்ஸி நோட்டுக் கட்டுகளைப் பார்த்த அதிகாரிகள், கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளை  எடுத்துச்சென்ற அந்த காரை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுசென்று தீவிர சோதனை நடத்தியதில், காரின் கதவு மற்றும் பல்வேறு பகுதியில் மறைத்துக் கொண்டுவரப்பட்ட ரூபாய்  2.10 கோடி மதிப்பிலான கரன்ஸி நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர்.
அதையடுத்து, அந்த காரில் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்கதுரை மற்றும் மாநில நிர்வாகிகள் பிரபாகரன் உள்ளிட்ட 3 பேர், அந்தப் பணத்தை திருச்சியிலிருந்து கொண்டுசென்றது தெரியவந்தது.  அதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் எண்ணப்பட்டு, வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து தொடர்ந்து  விசாரணை நடைபெற்றுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக,  இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் வணிகர் அணி மாநில துணைச் செயலாளரான திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா (எ) அழகர்சாமி என்பவருக்குச் சொந்தமான இ.எல்.எஃப்.ஐ.என் எனும் நிறுவனத்தில், இன்று காலையிலிருந்து வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம்,  ராஜாவை  இரண்டு கார்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், காரை வழிமறித்து அரிவாள், கத்தியைக் காட்டி மிரட்டி கடத்திச்சென்றனர். மேலும் அவர்கள், ரூ.4 லட்சம் பணம், 18 பவுன் நகைகளைப் பறித்ததுடன், ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக திருச்சி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வி.சி.க வணிகர் அணியின் செயலாளரைக் குறிவைத்து ஐ.டி ரெய்டு!

புகாரில், சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அசோக் மற்றும் பட்டாசு ராஜா ஆகிய இருவருக்கும் கடத்தலில் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுடன் இணைந்து தொழில்புரிந்த ராஜா, தற்போது விலகிச்சென்றதால், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டது. அந்த வழக்கில்,  திருச்சி ஜீவா நகர் ராஜா என்கிற ராஜேந்திரன், ஶ்ரீரங்கம் ராஜ்குமார், வேடசந்தூர் ஆதிநாராயணன் உள்ளிட்ட மூவரை கைதுசெய்த போலீஸார், ரவுடிகளான பட்டாசு ராஜா, சாமி ரவி, அசோக், செந்தில் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தார்கள்.
அடுத்த சிலவாரங்களில்,  ராஜாவுக்கு சொந்தமான  எல்பின் இ.காம் நிறுவனம் மூலம், ரியல் எஸ்டேட், ஆன்லைன் மளிகைப் பொருள்கள் விற்பனை மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச்செல்வது, பரிசுப் பொருள்கள் வழங்கும் திட்டம் போன்றவற்றை நடத்தி வருவதாகவும், இந்த இந்நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் 15 லட்சம் மோசடி செய்ததாகவும், கடந்த மாதம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் சோதனை செய்தனர். இது தொடர்பாக ராஜா கைதுசெய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னிடம் பணம் கேட்டு தொடர்ந்து பல்வேறு வழிகளில் தொல்லைகொடுக்கும் கும்பல் செய்த வேலைதான் என தொழிலதிபர் ராஜா கூறிவருகிறார்.  இப்போது, 2.10கோடி ரூபாய் தேர்தல் அதிகாரிகளிடம் சிக்கியதும், அதையடுத்து நடக்கும் சோதனையும் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.  
அடுத்த கட்டுரைக்கு