`கொலை மிரட்டல்கள் வந்துள்ளன; ஆனால் அஞ்சமாட்டோம்’ - தேர்தல் பிரசாரத்தில் குதித்த ’கே.ஜி.எஃப்’ ஹீரோ!  | actor yash starts campaign for sumalatha ambareesh

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (03/04/2019)

கடைசி தொடர்பு:11:28 (04/04/2019)

`கொலை மிரட்டல்கள் வந்துள்ளன; ஆனால் அஞ்சமாட்டோம்’ - தேர்தல் பிரசாரத்தில் குதித்த ’கே.ஜி.எஃப்’ ஹீரோ! 

2019 நாடாளுமன்றத் தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுயேச்சை வேட்பாளாராகக் களமிறங்குகிறார், நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அம்பரீஷின் மனைவி நடிகை சுமலதா. இந்தத் தொகுதியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியில் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் வேட்பாளராக நிற்கிறார்.  இவருக்கு ஆதரவாக குமாரசாமி, தேவகவுடா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சுமலதா அம்பரீஷை ஆதரித்து கன்னட நடிகர்கள் தர்ஷன், யாஷ் ஆகியோர் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.

யாஷ்

இவர்களைக் காண மாண்டியா தொகுதியில் கூட்டம் அலைமோதியது. பிரசாரத்தில் பேசிய யாஷ், “அம்பரீஷ் உயிருடன் இருந்தபோதிலிருந்தே நாங்கள் அவர் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்துவருகிறோம். எங்களுக்கு சில கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. ஆனால், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்’ என்று பேசியுள்ளார். சமீபமாக, இவர் நடித்த ’கே.ஜி.எஃப்’ திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற நிலையில், இவருக்கான ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். அதற்காகத்தான், இவரை பிரசாரத்தில் ஈடுபட வைத்துள்ளனர் என்று பேச்சுகளும் வந்தவண்ணம் உள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க