Published:Updated:

`சீட் கிடைக்காதுனு இருந்தார்; இப்போ அடிச்சுவிரட்டுறாங்க!' - கரூரில் தம்பிதுரையை வசைபாடிய மு.க.ஸ்டாலின்

`சீட் கிடைக்காதுனு இருந்தார்; இப்போ அடிச்சுவிரட்டுறாங்க!' - கரூரில் தம்பிதுரையை வசைபாடிய மு.க.ஸ்டாலின்
`சீட் கிடைக்காதுனு இருந்தார்; இப்போ அடிச்சுவிரட்டுறாங்க!' - கரூரில் தம்பிதுரையை வசைபாடிய மு.க.ஸ்டாலின்

`சீட் கிடைக்காதுனு இருந்தார்; இப்போ அடிச்சுவிரட்டுறாங்க!' - கரூரில் தம்பிதுரையை வசைபாடிய மு.க.ஸ்டாலின்

"தம்பிதுரை ஈ.பி.எஸ் அணியில் இருக்கிறாரா இல்லை, ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறாரா என்பது அ.தி.மு.க-வினருக்கும் தெரியாது; அவ்வளவு ஏன், அது தம்பிதுரைக்கே தெரியாது. தம்பிதுரைக்கு, கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்குமான்னு அவருக்கே சந்தேகமாகத்தான் இருந்தது" என்று கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலினின் வெளுத்துவாங்கினார்.

தமிழகத்தில், வரும் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்காக, தமிழகம் முழுக்க பிரசாரம் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கு வாக்குகள் சேகரிக்கும் பொதுக்கூட்டம், தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியால் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதில், ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்திற்கு 4,000 பேர்களுக்கு மேல் கூட்டி, ஸ்டாலினை மிரள வைத்தார் செந்தில் பாலாஜி. ஆனால், காலை ஒன்பதரை மணிக்கு பொதுக்கூட்டம் தொடங்கியவுடன், வெயில் உக்கிரம் காட்டத் தொடங்கியது. இதனால், ஸ்டாலின் பேச ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே கூட்டம் கலையத் தொடங்கியது. கால்வாசி கூட்டத்தோடுதான் பேசி முடித்தார்.

கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "இந்த அபரிமிதமான கூட்டத்தைப் பார்க்கும்போது, இது வெறும் பிரசார கூட்டம் போல் மட்டும் தெரியவில்லை. நமது வெற்றிவிழா கூட்டமாகத் தெரிகிறது. மோடியின் பாசிச ஆட்சிக்கு முடிவுகட்டும் நாள் ஏப்ரல் 18. ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து, அமோகமாக வெற்றிபெறச் செய்ய வேண்டும். இவரை எதிர்த்துப் போட்டியிடும் தம்பிதுரை, கடந்த 10 ஆண்டுகளாக எம்.பி-யாக இருந்தார். ஆனால், தொகுதிக்கு எதையும் செய்யலை. அதோடு, பா.ஜ.க-வை எதிர்த்துப் பேசிவந்த அவர், இப்போது பா.ஜ.க-வையும், மோடியையும் ஆஹா ஓஹோவென்று புகழ்கிறார். அவருக்கு கரூரில் இந்த முறை சீட் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருந்தது. தம்பிதுரையே, தனக்கு சீட் கிடைக்காது என்றுதான் கடைசிவரை நினைத்தார். அதேபோல, 'அ.தி.மு.க-வில் எந்த அணியில் தாம் இருக்கிறோம்' என்று தெரியாமல் உள்ள ஒருவர்தான் தம்பிதுரை. தொடர்ந்து மத்திய அரசின் ஆட்சியையும், தமிழகத்திற்கு எதிரான அவர்களது செயல்களையும் விமர்சித்துவந்த தம்பிதுரை, இன்று பா.ஜ.க-வை ஆதரித்துப் பேசிவருகிறார். அவரை பிரசாரத்திற்கு போகும் இடங்களில் எல்லாம் மக்கள் அடித்து விரட்டுகிறார்கள்.

ஆனால் அவர், 'எனக்கு ஓட்டு போட்டா போடுங்க... போடாட்டி போங்க. ஓட்டுக்காக உங்க கால்ல எல்லாம் விழ முடியாது'னு மக்களிடம் பேசியிருக்கிறார். இது ஜூ.வி-யில் செய்தியா வந்திருக்கு. தி.மு.க இதுவரை செய்த திட்டங்களையும், சாதனைகளையும், ஆட்சிக்கு வந்தபின் செய்யவுள்ள திட்டங்களையும் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க-வினர், தாம் செய்த திட்டங்களைச் சொல்லி ஓட்டு கேட்க முடியாமல், தி.மு.க-காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்து வாக்கு கேட்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி முதல்கொண்டு அப்படி விமர்சனம் செய்கிறார். தி.மு.க ஆட்சியிலிருந்தவரை நீட் தேர்வை தமிழகத்திற்குள் அனுமதிக்கவில்லை. மத்தியில் 'கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற கருணாநிதியின் முழக்கத்திற்கு ஆதரவளிப்பதுபோல, தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்திக்கு எனது நன்றி. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து பயந்துபோய் பிதற்றத் தொடங்கியுள்ளார் மோடி. 

வேலூர் தொகுதியில், வரும் இரு சட்டமன்றத் தொகுதி தேர்தலையும் தள்ளிவைக்க ஐடியா செய்துதான், துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்த வச்சிருக்கு எடப்பாடி அரசு. 18 தொகுதி இடைதேர்தலிலும் தி.மு.க வெற்றிபெற்றுவிடும் என்கிற பயத்துலதான் அப்படி பண்ண வச்சிருக்காங்க. ஆனா, ரெண்டு நாள்கள் ரெய்டு நடந்தும் ஒண்ணும் எடுக்க முடியலை. துரைமுருகன் கணக்கை சரியாக காட்டியதால், ரெய்டு செய்த அதிகாரிகள் முழிபிதுங்கிப் போயிட்டாங்க. 'ஏன் இப்படி'னு அவங்ககிட்ட கேட்டா, 'புகார் வந்துச்சு. ரெய்டு பண்ணுனோம்'னு சொல்றாங்க. நான் இப்போது புகார் சொல்கிறேன், இ.பி.எஸ், ஓ.பி.எஸ் வீடுகளில் கோடிகோடியா பணமிருக்கு. அங்கே ரெய்டு பண்ணுவீர்களா?. அதேபோல், மோடி வீட்டில் ரஃபேல் ஊழல் பணம் கோடிகோடியா கொட்டிக் கிடக்கு. அதை ரெய்டு பண்ண தைரியம் இருக்கா? என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றிபெறும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு