`கிறுக்குப் பய நாட்டாமை; வாயே வம்பு; காசுக்குப் பஞ்சம்!' - தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி கைகூடுமா?! | Star candidate of Theni - Thanga. Tamil Selvan

வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (08/04/2019)

கடைசி தொடர்பு:11:11 (09/04/2019)

`கிறுக்குப் பய நாட்டாமை; வாயே வம்பு; காசுக்குப் பஞ்சம்!' - தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி கைகூடுமா?!

`அம்மாவின் தீவிர விசுவாசி, சசிகலாவின் நம்பிக்கைக்குரிய தளபதி' என்ற அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர் தங்க தமிழ்ச்செல்வன். இவருடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? இவரைச் சுற்றியிருக்கும் சர்ச்சைகள் என்னென்ன?

`கிறுக்குப் பய நாட்டாமை; வாயே வம்பு; காசுக்குப் பஞ்சம்!' - தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனி கைகூடுமா?!

Star Candidate - Thanga Tamilselvan

நட்சத்திர வேட்பாளர்:  தங்க தமிழ்ச்செல்வன் (தேனி)

வேட்பாளர் பற்றிய சுருக்கமான அறிமுகம்!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருக்கும் நாராயணதேவன்பட்டியில் பிறந்தவர் தங்கதமிழ்ச்செல்வன். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். தந்தை தங்கவேல். தாயார் சரஸ்வதி. எம்.ஏ முதுகலைப் படிப்பை நிறைவு செய்துள்ள தங்க தமிழ்ச்செல்வனுக்கு உப தொழிலாக விவசாயம் உள்ளது. 1980-ல் இருந்து அ.தி.மு.க உறுப்பினர். 1996 ம் ஆண்டு ஜெ.,பேரவை தேனி மாவட்டச் செயலாளர், 2000 ம் ஆண்டு மாநில மாணவர் அணிச் செயலாளர், 2004ல் ஜெ,. பேரவை மாநிலச் செயலாளர் எனத் தொடர்ந்து ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தார். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ, ராஜ்யசபா உறுப்பினர், தேனி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எனப் பல பதவிகளை வகித்திருக்கிறார். `அம்மாவின் தீவிர விசுவாசி, சசிகலாவின் நம்பிக்கைக்குரிய தளபதி' என்ற அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர்.  

தங்க தமிழ்செல்வன்

டான்சி நிலபேரம்! 

டான்சி நில பேரம் வழக்கில் 2000-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது. இதன் காரணமாக 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவரால் போட்டியிடமுடியவில்லை. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க அமோகமாக வெற்றி பெற்றது. ஆண்டிப்பட்டி தொகுதியில் களம் கண்ட தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ ஆனார். சிறைத்தண்டனை பெற்றாலும் அ.தி.மு.கவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராகப் பொறுப்பேற்றார். இது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றமும், `ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது' எனத்  தீர்ப்பளித்தது. இதனையடுத்து அமைச்சரவை கலைக்கப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. இதன் பின்னர் வழக்குகளிலிருந்து ஜெயலலிதா விடுதலையானார். ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் தங்கம். 2002-ல் ஆண்டிபட்டியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார் ஜெயலலிதா. 

தொகுதியில் ஏற்கெனவே அவர் போட்டியிட்டிருந்தால், 

பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்த தேனி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தேனி தொகுதியாக மாற்றப்பட்டது. அதன்பின்னர், 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார் தங்கம். இந்தத் தேர்தலில் காங்கிரஸின் ஜே.எம்.ஆரூணிடம் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். பன்னீர்செல்வத்துக்கு முன்பிருந்தே தேனி தொகுதியில் அ.தி.மு.கவின் முகமாக வலம் வருபவர். தேனியில் ஓ.பி.எஸ் குடும்பத்தினருக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற பேச்சு உள்ளது. இந்த அதிருப்தி வாக்குகளை தங்கத்தமிழ்செல்வன் அறுவடை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த சமூகத்தினர் நிறைந்திருப்பதும், பெரியகுளம் தொகுதி எம்.பியாக தினகரன் இருந்த போது செய்த பணிகள் அனைத்தும் தங்கத்துக்கான பிளஸ்கள். 

சுவாரஸ்யங்கள்

டாப் 5 சுவாரஸ்யங்கள்: 

1. தேனி வட்டார வழக்குகளில் பேசி கலக்குவார். 

2. ஓ.பி.எஸ் இவரை `தங்கம்’ என்றுதான் அழைப்பார்.

3. `கேணப்பய ஊருல கிறுக்குப்பய நாட்டாமையாம்' என்ற வட்டார வழக்குச் சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார்.

4. கோபம் அதிகமாக வந்தால் எதிரில் யார் இருந்தாலும் கெட்ட வார்த்தையை மழையாகப் பொழிந்துவிடுவார். 

5. தினகரனே சமரச உடன்பாட்டுக்குத் தயாரானாலும் பன்னீர்செல்வத்தைப் பரம எதிரியாகப் பார்ப்பது.

டாப் 2 சர்ச்சைகள்: 

1. ஜெயலலிதாவே எதிரில் இருந்தாலும் நினைத்ததைப் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது.

2. சொந்த சமுதாய ஆட்களுக்கு மட்டும் அ.ம.மு.க நிர்வாகப் பொறுப்புகளைப் பிரித்துக் கொடுத்தது.

அடைமொழி

சக போட்டியாளர்களின் பிளஸ், மைனஸ்: 

அ.தி.மு.க வேட்பாளராக ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் களமிறங்கியிருக்கிறார். இந்த அணியில் பா.ஜ.க அங்கம் வகிப்பதால், தேனியில் உள்ள இஸ்லாமிய வாக்குகள் அனைத்தும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இளங்கோவனுக்கும் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பெரும்பான்மையாக இருக்கும் பிரமலைக்கள்ளர் சமுதாய வாக்குகள் தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பெரிய பிளஸ். பணப்பட்டுவாடா மூலம் தங்க தமிழ்ச்செல்வனை மூன்றாவது இடத்துக்குத் தள்ள முயற்சி செய்து வருகிறார் ரவி. தேர்தல் பிரசாரம் களைகட்டினாலும் போதிய நிதி இல்லாதது தங்கத்துக்கான மைனஸ். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், சொந்த சமூக வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறார். இதுவரை, நாயக்கர் சமூக வாக்குகள் அனைத்தும் பன்னீர்செல்வத்துக்குச் சென்று கொண்டிருந்தன. அதை இளங்கோவன் பிரிப்பது அ.தி.மு.கவுக்கு மைனஸ். 

தினகரனுடன்...

மத்திய, மாநில அரசுகள் மீதான எதிர்ப்பு, சிறுபான்மை மக்களின் கோபம், சொந்த சமூகத்தின் பலம் எனத் தங்க தமிழ்ச்செல்வனுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. பணப்பட்டுவாடா உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தை வீழ்த்துவதற்குத் தயாராகி வருகிறார் ரவி. தி.மு.க கூட்டணி பிளஸ் காங்கிரஸ் கட்சியின் பலம் போன்றவைகளால் கடும் சவாலாக விளங்குகிறார் ஈ.வி.கே.எஸ். பரிசுப்பெட்டி, கை, இலை எனத் தேனி மக்களின் மனதை வெல்லப் போவது யார் என்பதை அரசியல் விமர்சகர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். 

இந்த வேட்பாளருக்கு உங்கள் ரேட்டிங்கைப் பதிவு செய்ய...

 

 


டிரெண்டிங் @ விகடன்