Published:Updated:

ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தில் சிவகங்கை புறக்கணிப்பு - என்ன காரணம்?

பாலமுருகன். தெ
ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தில் சிவகங்கை புறக்கணிப்பு - என்ன காரணம்?
ராகுல் காந்தியின் தமிழகப் பயணத்தில் சிவகங்கை புறக்கணிப்பு - என்ன காரணம்?

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஸ்டார் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். இவருக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழகம் வரும் ராகுல், சிவகங்கைத் தொகுதிக்கு வரவில்லை. இதனால், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியானது.

'காங்கிரஸ் கட்சியின் பதவியில் இருப்பவர்கள் யாரும்  வேட்பாளராகப் போட்டியிட முடியாது' என்று கட்சியின் கொள்கை முடிவாக அறிவித்திருந்தார் ராகுல் காந்தி. அதனடிப்படையில், கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் போட்டியிட மாட்டார். அவருக்குப் பதிலாக,  ஸ்ரீநிதி நிறுத்தப்படுவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. அதற்கு அடுத்த நிலையில் சுதர்சனநாச்சியப்பன்  நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், எப்படியாது தன் மகனுக்கு சீட் வாங்கியே ஆகவேண்டும் என்று டெல்லியில் முகாமிட்டிருந்து, கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் வாங்கியிருக்கிறார் சிதம்பரம். இதுவே ராகுல் காந்தியின் அதிருப்திக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.  இந்த அதிருப்தியின் காரணமாகவே தன்னுடைய பிரசாரப் பயணத்தில் சிவகங்கையை நீக்கியிருக்கிறார். இதற்குக் காரணம், சிதம்பரத்தின் மீது இருக்கும் கோபத்தின் உச்சம்தான் என்கிறார்கள். சீட் கிடைக்காத அதிருப்தியில் இருந்த சுதர்சனநாச்சியப்பனை காங்கிரஸ் கட்சித் தலைமை சமாதானப்படுத்தியது. அதன்பிறகு, கார்த்தி சிதம்பரத்தை சந்தித்து ஆதரவு கொடுத்தார் சுதர்சனநாச்சியப்பன். தற்போது வயநாட்டில் போட்டியிடும் ராகுல் காந்திக்கு தேர்தல் பணி செய்ய அங்கே முகாமிட்டிருக்கிறார், நாச்சியப்பன்.

இந்த நிலையில்தான், வரும் 12-ம் தேதி கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்திலும், சேலம் பொதுக்கூட்டத்திலும் தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் கலந்துகொள்கிறார் ராகுல். மேலும், விருதுநகர் தொகுதிக்கு திருப்பரங்குன்றத்தில் பேசுகிறார். தேனியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி.