Published:Updated:

`கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவுக்கு மட்டும்தான் அழைப்பு விடுத்தோம்; ராகுலும் வந்தார்!' - ஸ்டாலின்

`கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவுக்கு மட்டும்தான் அழைப்பு விடுத்தோம்; ராகுலும் வந்தார்!' - ஸ்டாலின்
`கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவுக்கு மட்டும்தான் அழைப்பு விடுத்தோம்; ராகுலும் வந்தார்!' - ஸ்டாலின்

`கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு சோனியாவுக்கு மட்டும்தான் அழைப்பு விடுத்தோம்; ராகுலும் வந்தார்!' - ஸ்டாலின்

``நாட்டுக்கு காவலர்'ன்னு தன்னை தானே கூறிக்கொள்ளும் மோடி ஒரு களவாணி, மோடி க்கு முட்டுக் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி ஒரு உதவாக்கரை” என மயிலாடுதுறையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். 

சூரியன் சுட்டெரிக்கும் அனலிலும், சூடு பிடித்திருக்கிறது தமிழக நாடாளுமன்ற தேர்தல் களம். அனைத்துக் கட்சி தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 20 நாள்களுக்கு முன்பு திருவாரூர் தொகுதியில் தன் பிரசாரத்தைத் தொடங்கிய தி.மு.க தலைவர் ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் திருவிடைமருதூர் செ.ராமலிங்கத்தை ஆதரித்துப் பிரசாரக் கூட்டத்தில் பேசினார்.

பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``இயற்கையின் சதி. இன்று கலைஞர் இல்லை., கலைஞரின் சார்பில் நான் வந்திருக்கிறேன்... ஆதரவு தருவீர்களா....? ''என்று தன் பேச்சைத் தொடங்கினார்.  தொடர்ந்து, ``மத்தியில் சர்வாதிகார தன்மையோடு ஆட்சி செய்யும் மோடியையும், மாநில உரிமையை விட்டுக் கொடுத்து எடுபிடியாகக் கூனிக்குறுகி கொலைகார ஆட்சி நடத்தும் எடப்பாடியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

தலைவர் கலைஞரின் சிலை திறப்பு விழாவிற்குச் சோனியாவை மட்டுமே அழைத்தேன், என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் , பத்திரிகையில் என் பெயர் போட்டாலும், போடாவிட்டாலும் தலைவரின் சிலை திறப்பு விழாவிற்கு நானும் வருவேன் என்று அழைக்காமலே வந்தவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தியை வேறு யாரும் முன்மொழிவதற்கு முன்பு மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமராக வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். அதுவரை மத்தியில் எனக்குப் போட்டி இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த மோடி அதன்பின் ஆத்திரம் தாங்காமல், திட்டமிட்டுச் செய்வது தான் தி.மு.க பிரமுகர்களின் இல்லத்தில் நடைபெறும் சோதனைகளும், ரெய்டுகளும். தவறு இருந்தால் தண்டிக்கட்டும், ஏற்றுக்கொள்ள தி.மு.க தயார். ஆனால், ஆளுங்கட்சி பதுக்கி வைத்துள்ளார்களே., அதற்குப் புகார் நான் தருகிறேன் , தேர்தல் ஆணையமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்கத் தயாரா?.

எடப்பாடி என்னவோ எம்.ஜி.ஆர் மாதிரி வேனில் நின்றும், காலர் மைக் பயன்படுத்தியும் பிரசாரம் என்ற பெயரில் நம்மை குறை சொல்கிறாரே தவிர அவர்கள் செய்தவற்றை சொல்ல முடியவில்லை. ஏனென்றால், சட்டியில இருந்தா தான அகப்பையில் வரும்.
நேற்று வரை திட்டிவிட்டு ஊழல் வழக்கு தொடர்ந்துவிட்டு இன்று அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்திருக்கும் பா.ம.கவின் பெரிய ஐயா. ஆடு வளர்த்தேன், மாடு வளர்த்தேன் நானும் ஒரு விவசாயி தான் என்று சொல்லும் எடப்பாடி . இவங்க எல்லாம் மக்கள் வாழ்வாதாரத்தை பெருக்குகிறேன் என்று சொல்லிட்டு அவங்க அவங்க வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொண்டார்கள். மக்கள் நலனில் இப்படி அக்கறை எடுத்துக் கொள்ளாத எடப்பாடி ஒரு உதவாக்கரை, நாட்டிற்கு காவலர் என்று தன்னைத்தானே பெருமை பேசி கொள்ளும் மோடி ஒரு களவாணி" என்று ஆவேசக் குரல் எழுப்பினார் மு.க.ஸ்டாலின்.

``ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம்  என்னவென்று கண்டுபிடிப்பேன். ஏன் என்றால் ஜெயலலிதா தான் எனக்கும் முதலமைச்சர். அவர் பதவியில் இருந்த வரை தி.மு.க. வினர் அனைவருக்கும் அவர்தான் முதலமைச்சர்" என்று பேசிய ஸ்டாலின், தன் தந்தை இறந்த பிறகு மெரினாவில் இடம் கேட்டு மறுக்கப்பட்டதை நினைவுகூர்ந்து கண் கலங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு