மோடி சொன்னதும் நடந்ததும்: 'பிரதமரின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ் கட்டப்பட்ட புதிய எய்ம்ஸ் எத்தனை? பகுதி - 8 | What happened Pradhan Mantri Swasthya Suraksha Yojana..? Part - 8

வெளியிடப்பட்ட நேரம்: 12:44 (16/04/2019)

கடைசி தொடர்பு:15:02 (16/04/2019)

மோடி சொன்னதும் நடந்ததும்: 'பிரதமரின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ் கட்டப்பட்ட புதிய எய்ம்ஸ் எத்தனை? பகுதி - 8

பி.ஜே.பி. அரசு அறிவித்த இந்தத் திட்டத்தின் பெயரில் எவ்வித மாற்றமும் செய்யாமல், காங்கிரஸ் தலைமையிலான அரசு அனுமதி வழங்கி, பாட்னா, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஆணையைப் பிறப்பித்தது.

மோடி சொன்னதும் நடந்ததும்: 'பிரதமரின் ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டத்தின்' கீழ் கட்டப்பட்ட புதிய எய்ம்ஸ் எத்தனை? பகுதி - 8

த்திய பி.ஜே.பி. அரசின் மக்கள் நலத்திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து இந்தத் தொடரில் நாம் பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்பகுதியில், நாடுமுழுவதும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கும் நோக்கில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் `பிரதம மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா' (பிரதம மந்திரி ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம்) செயல்பாடுகள் பற்றிப் பார்ப்போம்...

மோடி சொன்னதும் நடந்ததும்

`பிரதம மந்திரி ஆரோக்கியப் பாதுகாப்புத் திட்டம்' :

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களுக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை அளித்திடவும், நாட்டின் பின்தங்கிய மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் உயர்தர மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யவும், அத்தகைய மக்களுக்கான சமச்சீரின்மையைப் போக்கும் வகையிலும் தொடங்கப்பட்ட திட்டம்தான் `பிரதம மந்திரி ஸ்வாஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா'. இந்தத் திட்டம், கடந்த 2003-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயால் அறிவிக்கப்பட்டு, 2006-ம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அத்திட்டத்திற்கு அனுமதியளித்தார்.

இந்தத் திட்டத்தில் நடந்தது என்ன?

மோடி சொன்னதும் நடந்ததும்...

மோடி சொன்னதும் நடந்ததும்...

பி.ஜே.பி. அரசு அறிவித்த அந்தத் திட்டத்தின் பெயரில் எவ்வித மாற்றமும் செய்யாமல், காங்கிரஸ் தலைமையிலான அரசு அனுமதி வழங்கி, பாட்னா, போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய ஆறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான ஆணையைப் பிறப்பித்தது. அந்த மருத்துவமனைகள் அமைப்பதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது அந்த ஆறு நகரங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் பயன்பாட்டில் உள்ளன. அதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேச மாநிலம் ரே பரேலியில் புதிதாக ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அனுமதி அளிக்கப்பட்டு, 823 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனை அடுத்த ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய மத்திய பி.ஜே.பி அரசு, கடந்த ஐந்தாண்டுகளில் 14-க்கும் மேற்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கு ஆணைப் பிறப்பித்து, பீகார் மாநிலம் தவிர இதர மாநிலங்களில் அதற்கான அனுமதியை அளித்துள்ளது. பீகாரைப் பொறுத்தவரை, மருத்துவமனை அமைப்பதற்கான இடம் கையகப்படுத்தப்படாமல் இருப்பதே, அனுமதி தாமதமாவதற்கான காரணம் என்று தெரிகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அரசுப் பொது மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முந்தைய காங்கிரஸ் அரசும், இப்போதைய பி.ஜே.பி. அரசும் எடுத்து வந்திருக்கின்றன. மத்திய அரசின் திட்டத்தின்கீழ் உயர்தர சிகிச்சைக்கான நிதி ஒதுக்கீடும் படிப்படியாகச் செய்யப்பட்டு வருகின்றன. 

புதிதாக அறிவிக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள் அனைத்தும் வரும் 2024-ம் ஆண்டுக்குள் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று மத்திய அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஸ்வாஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா' திட்டத்தைப் பொறுத்தவரை, பி.ஜே.பி. தலைமையிலான தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சிறப்பாகச் செயல்பட்டு வந்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

- தொடரும்...


டிரெண்டிங் @ விகடன்