204 கோடி பணம்; 3 கோடி மதிப்பிலான மதுபானங்கள் - தேர்தல் ஆணையத்தின் `பறிமுதல்' ரிப்போர்ட்! #infographics | seizure report released by election commision of india

வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (17/04/2019)

கடைசி தொடர்பு:15:45 (17/04/2019)

204 கோடி பணம்; 3 கோடி மதிப்பிலான மதுபானங்கள் - தேர்தல் ஆணையத்தின் `பறிமுதல்' ரிப்போர்ட்! #infographics

``வேலூர் மக்களைவைத் தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ஏப்ரல் 14-ம் தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலை ரத்து செய்துள்ளார்" என்ற செய்தியை நேற்று வெளியிட்டது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித் துறையினரால் அதிகப் பணம் வேலூர் தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டதே இந்தத் தேர்தல் ரத்தானதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

இந்தியா முழுவதும், நேற்று (16.4.2019) வரை எவ்வளவு பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இதில் அதிகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்களில் முதலிடம் பிடித்திருக்கிறது தமிழகம். அடுத்தடுத்த இடங்களில் முறையே ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. அதிக மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது குஜராத். அதிகம் மதிப்புகொண்ட மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலம் உத்தரப்பிரதேசம் என்றும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி உட்பட விலை உயர்ந்த உலோகங்கள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்ட மாநிலங்கள் பட்டியலிலும் தமிழகமே முதலிடம் பிடித்துள்ளது.

தேர்தல் ஆணையம்

இந்தியா முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்தப் பொருள்கள் மற்றும் பணத்தின் மதிப்பு 2,604.408 கோடி என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க