Published:Updated:

மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்! - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு

மணிமாறன்.இரா
மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்! - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு
மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்! - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு

புதுக்கோட்டை மச்சுவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றி வைத்து வாக்குப்பதிவு செய்ததாகக் கூறி திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்குச்சாவடி அலுவலகத்தைத் தனது ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்! - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை(தனி) ஆகிய இரு தொகுதிகள் வருகிறது. இந்த இரு தொகுதிகளின் வாக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். திருச்சி நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களே, காலை முதலே, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டையில் உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாகச் சென்று வாக்குப்பதிவு எவ்வாறு நடைபெறுகிறது என்பதைக் கவனித்து வந்தனர். இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மச்சுவாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் காலை முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது, குறிப்பாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரிசைப்படி இல்லாமல் மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்று கூறி வாக்குப்பதிவு நடத்தும் அதிகாரிகளிடம் அ.ம.மு.க-வினர் புகார் தெரிவித்தனர்.

மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்! - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு

ஆனாலும், அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரத்தை மாற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை அ.ம.மு.க-வினர் திருச்சி நாடாளுமன்ற அ.ம.மு.க வேட்பாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, நேரடியாக மச்சுவாடி வாக்குச்சாவடிக்கு வந்த வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், காலையிலிருந்து தனக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் மாற்றி விழுந்துள்ளது. எனவே, இந்த வாக்குச்சாவடியில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று கூறி வாக்குப்பதிவு நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அலுவலர்கள் இவர்கள் கோரிக்கையை ஏற்க மறுக்கவே, வாக்குச்சாவடி அலுவலகத்தில் அ.ம.மு.க நிர்வாகிகளோடு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் தண்டாயுதபாணி சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்! - திருச்சி வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் தர்ணாவால் பரபரப்பு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு மறு வாக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க வைக்கிறேன்" என்று கூறி போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற தர்ணா போராட்டத்தால், வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. மேலும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு முடிவுற்றது.