எந்த பட்டன் அழுத்தினாலும் இரட்டைஇலை முதல் சுந்தர் பிச்சை வந்தாரா வைரல் வரை... தமிழகத் தேர்தலின் டாப் ஹைலைட்ஸ்! #5MinRead | Highlights of polling day in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 09:58 (19/04/2019)

கடைசி தொடர்பு:10:39 (19/04/2019)

எந்த பட்டன் அழுத்தினாலும் இரட்டைஇலை முதல் சுந்தர் பிச்சை வந்தாரா வைரல் வரை... தமிழகத் தேர்தலின் டாப் ஹைலைட்ஸ்! #5MinRead

தமிழத்தில் ஜனநாயக திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தவிர்த்து 38 தொகுதிகளிலும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் காலை முதலே உற்சாகத்துடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு வந்து வாக்குகளைப் பதிவு செய்தனர். 

முதல் முறை ஓட்டளிப்பவர் முதல் 90 வயது பாட்டி வரை... தமிழகம் முழுவதும் களைகட்டிய ஜனநாயகத் திருவிழா! - சுவாரஸ்யப் புகைப்படத் தொகுப்பு

தமிழ்நாடு (38) தவிர்த்து கர்நாடகா (14), மகாராஷ்டிரா (10), உத்தரப்பிரதேசம் (8), அஸ்ஸாம் (5), பீகார் (5), ஒடிசா (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), ஜம்மு - காஷ்மீர் (2), மணிப்பூர்(1) ஆகிய மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் (1) நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நாடுமுழுவதும் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுவதால் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி இரவு 8 மணி வரை தொடர்ந்தது. 

 

 

 

நடிகர்கள் அஜித், ரஜினி, நடிகை ஷாலினி ஆகியோர் காலையில் தங்களது வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியிலும், அஜித் மற்றும் ஷாலினி திருவான்மியூரிலும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். 

 

 

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி சிலுவம்பாளையம் அ.ஊ.ஒ.து.பள்ளி வாக்குசாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். 

முதல்வர்

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு,  நடிகர்கள் ஸ்ரீகாந்த், விஜய், விஜய் ஆண்டனி ஆகியோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.  

தமிழகத்தில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. சில இடங்களில் இயந்திரங்கள் மாற்றப்பட்டு வாக்குப்பதிவுத் தொடர்ந்து நடைபெற்றது.  

காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதிகபட்சமாக ஆரணி தொகுதியில் 36. 51 சதவிகிக வாக்குகள் பதிவாகிவுள்ளன. மத்திய சென்னையில் 22.89 சதவிகித வாக்குகள் பதிவாகிவுள்ளன. 

11 மணி நிலவரம்

சில வாவ் தருணங்கள்...!

 

`வாழைத் தோரணம், சிவப்புக் கம்பளம், பன்னீர் தெளிப்பு!' - வரவேற்பால் நெகிழ்ந்த திண்டுக்கல் வாக்காளர்கள் - Read More

`ஆர்வம் காட்டாத இளைஞர்கள்' - வீல் சேரில் வந்து வாக்களித்த முதியவர்கள்! - Read More

எழுந்து நடக்க முடியாத நிலையிலும் ஓட்டுப்போட வந்த அரசுப் பேருந்து நடத்துநர்! − தேனியில் நெகிழ்ச்சி சம்பவம் - Read More

தமிழகத்தில் முதன்முறையாக மனநலக் காப்பகவாசிகள் 156 பேர் வாக்களிப்பு! - Read More

`தாலி கட்டியதும் பூத்துக்கு போய்விட்டோம்' - திருமணக் கோலத்தில் வாக்குப்பதிவு செய்த தம்பதி - Read More

``வாழ்க்கைல முதல் முறை ஒட்டு போட்டது சந்தோஷமா இருக்கு!" - கோவை முதியவரின் நெகிழ்ச்சி - Read More

`நம் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது!' - 101 வயதில் வாக்களித்து அசத்திய முன்னாள் எம்.பி - Read More

தேர்தல் புறக்கணிப்பு.....!
`ஓட்டு கேட்டுகூட வரமாட்டாங்க; நாங்க ஏன் வாக்களிக்கணும்?’ - தேர்தலைப் புறக்கணித்த மலைக்கிராம மக்கள் - Read More

`சார், ஒருத்தரும் ஓட்டு போட வரல' - ஷாக்காகிப்போன அதிகாரிகள், வேட்பாளர்கள் - Read More

`800 மீ பயணத்துக்காக 6 கி.மீ சுற்றிப் போகவேண்டியிருக்கிறது!' - தேர்தலைப் புறக்கணித்த மீனாட்சிபுரம் மக்கள் - Read More

`நிலம் ஆக்கிரமிப்பு புகார்!' - தேர்தலைப் புறக்கணித்த கோவை கிராம மக்கள் - Read More

வாக்களித்தப்பின் பிரபலங்கள் சொன்னது.......!

கமல், அஜித் முதல் முதல்வர் வரை... ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்! - சிறப்பு புகைப்படத் தொகுப்பு``தேர்தல் ஆணையத்தை விமர்சனம் செய்ய விரும்பவில்லை.. ஆனால்...” வாக்களித்தப் பின்னர் பொன்னார் சொன்னது என்ன? - Read More

`எந்தப் பொத்தானை அழுத்தினாலும் இரட்டை இலைக்குத்தான் வாக்கு விழுகிறது!' - திருமாவளவன் - Read More

`அவங்க கூட்டணியில், தேர்தல் ஆணையத்துக்கும் 2 சீட் கொடுத்திருக்கலாம்!' - உதயநிதி  ஸ்டாலின் - Read More

``நான் நல்லா இருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா?' - ஓட்டு போட்ட பின் வடிவேலு கலகல - Read More

``வாக்குப்பதிவின்போதும் ஐ.டி ரெய்டு; இது ஜனநாயக நாடா?’’ - துரைமுருகன் ஆவேசம் - Read More

`வேலூர் மக்கள் மட்டும் ஓட்டு போடல!’ - கண்ணீர்விட்டு அழுத ஏ.சி.சண்முகம் - Read More

`நாங்கள் முதல் இடம் பிடித்தால், யார் 2, 3-வது இடம் வருவார்கள்!'- வாக்களித்த ராமதாஸ் கேள்வி - Read More

`அது, நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்!' - மு.க. அழகிரி சூசகம் - Read More

`இதனால்தான் வாக்குச் சீட்டு முறையை அமல்படுத்தணும்னு வலியுறுத்துறோம்!' - கனிமொழி - Read Moreதே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

 

 

 

 

 

 

விகடன் செய்தி எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் அவர்களால் வேன் ஏற்பாடு செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்கு மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வீடியோ: ஜெயவேல்

'அட, சுந்தர் பிச்சைலாம் வரலைங்க!' - வைரல் போட்டோவின் பின்னணி -Read More

 

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தாலுகாவில் உள்ள சிறுநகர் பஞ்சாயத்து வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாமல் வாக்காளர்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். வாக்குச் சாவடிக்குச் செல்லும் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையில் ஜல்லி கலைக்கப்பட்டிப்பதால் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் சிறுநகர் பஞ்சாயத்துக்குட்பட்ட குமுளி, பிலான்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் பேசினோம். உடனடியாக மாற்று வாகன ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்துள்ளார். செய்தி&வீடியோ : பா.ஜெயவேல் #LokSabhaElections2019 #Electionwithvikatan #TNElection2019

 தமிழகத்தில் மாலை 3 மணி நிலவரப்படி 52.02 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.  


ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் உள்ள கட்டவிளாகம், கீழ்குடி, கள்ளவழியேந்தல், ருத்திரன்பட்டி, இழுப்பைகுடி உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1300 வாக்காளர்கள், கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஒருவர் கூட வரவில்லை. 
 

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அழகிய மண்டபம் பிலாங்காலை பகுதியில் உள்ள 157-வது வாக்குச்சாவடியில் கல்லுவிளைப் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவர் வாக்களிக்க வந்தபோது அவரது ஓட்டு பதிவானதாக தேர்தல் அதிகாரி கூறியதால் அதிர்ச்சியடைந்த அஜின் வாக்களிக்க முடியாமல் தேர்தல் அதிகாரியிடம் புகார் கூறினார்.

ஷாக்கான வாக்காளர்கள்......!போராடிய மீனவர்களின் வாக்குகள் நீக்கம்? - தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்ட கடற்கரை மக்கள்! - Read More

`இன்னொரு `சர்கார்' படம் எடுத்தால்தான் சரி செய்வீங்களா?' - வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கடுப்பான ரமேஷ் கண்ணா! - Read More

`2 தேர்தலா இங்கதான் ஓட்டு போட்டேன்; ஆனா இப்போ லிஸ்ட்ல பேர் இல்லனு சொல்றாங்க” - ரோபோ ஷங்கர் - Read More

`இறந்தவர்களுக்கு ஓட்டு இருக்கு; உயிரோடு இருக்கிற எங்களுக்கு இல்ல!' - ஒரே பூத்தில் 200 ஓட்டுகள் மாயமான பின்னணி - Read More

`மை வைத்துவிட்டனர்; ஓட்டு போட முடியவில்லை!' - அ.ம.மு.க வேட்பாளருக்கு அதிர்ச்சிகொடுத்த அதிகாரிகள் - Read More

வாக்குச்சாவடிக்குள் இரட்டை இலைச் சின்னத்தைக் காண்பித்த வேட்பாளர்! - திருப்பூர் சர்ச்சை - Read More

`உங்க ஓட்ட ஏற்கெனவே போட்டுட்டாங்க!' - 'சர்கார்' பட பாணியில் இளைஞரை அதிரவைத்த அதிகாரிகள் - Read More

 

 

 தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவிகித வாக்குகள் பதிவானது.  

வாக்களிக்க வரிசையில் நின்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மரணம்! - கோவை சோகம் -Read More


மை வைக்கும் நேரத்தில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு! - புதுக்கோட்டை சோகம் - Read More

`ஜனநாயகக் கடமையாற்ற வந்த மூதாட்டி!’ -வாக்குச்சாவடி மையத்தில் உயிரிழந்த பரிதாபம் - Read More

பானை சின்னத்தை உடைத்தவர்கள்மீது தாக்குதல்! - பதிலுக்கு வீட்டை நொறுக்கிய கும்பல் - Read More

கன்னியாகுமரி அருகே கத்தி, கம்புகளுடன் மோதிக்கொண்ட அரசியல் கட்சியினர்! - பா.ஜ.க-வினருக்கு கத்திக் குத்து - Read More

`அ.ம.மு.க வேட்பாளருடன் மோதல்; கார் உடைப்பு; போலீஸ் தடியடி!’ -ஆம்பூர், குடியாத்தத்தில் பதற்றம் - Read More

தமிழகத்தில் 37 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவை தொகுதிகளில் 69.55 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதிகபட்சமாக நாமக்கலில் 78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சென்னையில் 57.05 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

கடந்த தேர்தலைக்காட்டிலும் வாக்குப்பதிவு குறைவு! - தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு காரணமா? - Read More