Published:Updated:

`கொங்கு மண்டலத்தில் தொடர் தோல்வி ஏன்?!' - காரணம் சொன்ன எ.வ.வேலு

`கொங்கு மண்டலத்தில் தொடர் தோல்வி ஏன்?!' - காரணம் சொன்ன எ.வ.வேலு
`கொங்கு மண்டலத்தில் தொடர் தோல்வி ஏன்?!' - காரணம் சொன்ன எ.வ.வேலு
`கொங்கு மண்டலத்தில் தொடர் தோல்வி ஏன்?!' - காரணம் சொன்ன எ.வ.வேலு

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சின்னியம்பாளையத்தில் நடைபெற்றது. அதில், சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பொறுப்பாளரும்,  முன்னாள் அமைச்சருமான ஏ.வ.வேலு பேசும்போது,  "களத்தில் நின்று பணியாற்றுபவர்கள் ஊராட்சி செயலாளர்களும் வார்டு கழகச் செயலாளர்களும்தான். நாம் பெறும் வெற்றி அவர்களையே சேரும். சிறப்பாகப் பணி செய்ய உதவுவதற்காகவே நாங்கள் வந்துள்ளோம். சூலூருக்கு  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொங்கலூர் பழனிச்சாமி, பல்வேறு பொறுப்புகளில் இருக்கிறார். மாணவப் பருவத்தில் இருந்தே போர்க்குணம் கொண்டு வெற்றிகளைப் பெற்றவர். 

கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா இருக்கும் பகுதியிலேயே அ.தி.மு.க வெற்றிபெற முடியவில்லை. ஆனால், கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்துவிட்டோம்.  தலைமை அறிவித்தவுடன், வெற்றிபெற வேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும். இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். 

28-ம் தேதி மாலை,  செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பத்தாயிரம் பேருக்கு மேல் அதில்  கலந்துகொள்ள வேண்டும். முதல் நிகழ்ச்சியே பிரமாண்டமாக நடைபெற வேண்டும். எதிரிகளை வீழ்த்தும் விதமாக அது அமைய வேண்டும். சூலூர் பகுதியை 41 பகுதியாகப் பிரித்து  பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. 41 பொறுப்பாளர்களும், வெற்றிபெற வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டும். இளைஞரணி, மகளிரணி, தொழிலாளர் அணி, மாணவரணி எனத் தனித்தனியாக வாக்குகள்  சேகரிக்க உள்ளனர். 

`கொங்கு மண்டலத்தில் தொடர் தோல்வி ஏன்?!' - காரணம் சொன்ன எ.வ.வேலு

கொங்கு மண்டல தோல்வி தொடர்பாக ஆய்வுகள் நடத்தியதில், சாதி வாரியாக 2 -வது இடத்தில் அருந்ததியின மக்கள் இருப்பதும், அருந்ததியர் 15 சதவிகிதம்தான் தி.மு.க-விற்கு வாக்களித்ததும் தெரியவந்திருக்கிறது. அருந்ததியின மக்கள் டாக்டர் ஆனது கருணாநிதியால்தான் என உணர்கின்றனர். அவர்களின் முன்னேற்றத்திற்கு தி.மு.க-வின் பங்கு அதிகம் உள்ளது. அதை அந்த மக்களிடத்தில் எடுத்துச்செல்ல வேண்டும். அருந்ததியர் மாநாட்டில்கூட  தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன்  தீரன் சின்னமலையின் போர்ப்படை தளபதியான பொல்லானுக்கு மணி மண்டபம் கட்டி சிலை வைக்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாக்குசேகரிக்கும் போது, இதை மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்க வேண்டும். இந்தத் தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றி, கொங்குமண்டலத்தை வெற்றிபெற வைப்போம்'' என்றார்.

வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி பேசும்போது, "22 ஆண்டுகள் மாவட்ட கழகத்தின் பொறுப்பாளராக இருந்து நன்கு பழகியவன் நான். சாதாரண பொறுப்பிலிருந்து சட்டமன்ற உறுப்பினர், மாவட்டச் செயலாளர், அமைச்சர் எனப் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளேன். அ.தி.மு.க ஆட்சியில், கொங்கு நாட்டின் அமைச்சர்கள்தான் ஊழல்கள் செய்து கோடிகளைக் குவித்துவருகின்றனர். அவர்களை ஒரு கை பார்க்கத்தான் தலைவர் என்னை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளார். நிச்சயம் மாபெரும் வெற்றியை அடைவோம்" என்றார்