Published:Updated:

``செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை?" - சூலூர் தி.மு.க மேடையில் கொதித்த ஈஸ்வரன்

``செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை?" - சூலூர் தி.மு.க மேடையில் கொதித்த ஈஸ்வரன்
``செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை?" - சூலூர் தி.மு.க மேடையில் கொதித்த ஈஸ்வரன்

``செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை?" - சூலூர் தி.மு.க மேடையில் கொதித்த ஈஸ்வரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை என்று சூலூரில் நடைபெற்ற தி.மு.க கூட்டணி செயல் வீரர்கள் கூட்டத்தில் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சூலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், ``அ.தி.மு.க அரசால் சூலூர் தொகுதிக்கு எந்தப் பலனும் இல்லை. எட்டு ஆண்டுகளில் இவர்களால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. எதையுமே செய்யாமல், மீண்டும் ஒரு முறை இங்கு வெற்றி பெற நினைக்கிறார்கள். எதற்காக இந்த ஆட்சி தொடர வேண்டும். நான் அ.தி.மு.க-வை பார்த்துக் கேட்கிறேன். பெரிய தலைவர்களுக்கு எல்லாம் உங்கள் கட்சியில் மரியாதை கிடையாதா? செ.ம.வேலுச்சாமி இந்த மண்ணின் மைந்தன். அவரைவிட,  தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் கனகராஜின் தம்பி கந்தசாமி எந்த விதத்தில் சிறந்தவர்? சாமளாபுரத்தில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனுக்கு எஸ்.பி பதவி வழங்கி ஆட்சி தான் இது. பெண்களுக்கு எதிராக நடந்த தாக்குதலை வேடிக்கை பார்த்தவர் தான் மறைந்த எம்.எம்.ஏ கனகராஜ். தற்போது அவருடைய தம்பி கந்தசாமி அ.தி.மு.க வேட்பாளர்.

வேலுமணியை பார்த்துக் கேட்கிறேன். செ.வேலுச்சாமிக்கு சூலூரில் சீட் கிடைக்காததற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா. எனக்கு செ.ம.வேலுச்சாமி மீது பாசமில்லை. ஆனால், அவர் நின்றிருந்தால் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும். நமக்கும் கொஞ்சம் போட்டி நல்லா இருந்திருக்கும். அப்படிப்பட்டவரை விட்டுவிட்டு, அநியாயமா ஒருவரை பலிகடா  ஆக்கியிருக்கிறார்கள். செ.ம.வேலுச்சாமியால் இப்போது சீட் வாங்க முடியாவிடின் ஜென்மத்துக்கும் அ.தி.மு.க-வில் சீட் வாங்க முடியாது. செ.ம.வேலுச்சாமிக்கு ஏன் சீட் வழங்கவில்லை. கொங்குமண்டலத்தில் தங்களைத் தவிர யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காகத் தானே?" என்று கேள்வி எழுப்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு