Published:Updated:

``எடப்பாடிக்கு இந்தியாவையும் தெரியாது, தமிழ்நாட்டையும் தெரியாது!" - கே.எஸ்.அழகிரி கிண்டல்

``எடப்பாடிக்கு இந்தியாவையும் தெரியாது, தமிழ்நாட்டையும் தெரியாது!" - கே.எஸ்.அழகிரி கிண்டல்
``எடப்பாடிக்கு இந்தியாவையும் தெரியாது, தமிழ்நாட்டையும் தெரியாது!" - கே.எஸ்.அழகிரி கிண்டல்

``எடப்பாடிக்கு இந்தியாவையும் தெரியாது, தமிழ்நாட்டையும் தெரியாது!" - கே.எஸ்.அழகிரி கிண்டல்

"இப்போதைய அ.தி.மு.க-வுக்கு சுயமரியாதையும் கிடையாது. மாநில உரிமைகள்குறித்த அக்கறையும் கிடையாது. இந்தச் சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், இந்தியா மோடியின் கையில் பத்திரமாக இருக்கிறது என்று. எடப்பாடிக்கு இந்தியாவையும் தெரியாது. தமிழ்நாட்டையும் தெரியாது" என்று கே.எஸ்.அழகிரி சூலூரில் பேசியுள்ளார்.

``எடப்பாடிக்கு இந்தியாவையும் தெரியாது, தமிழ்நாட்டையும் தெரியாது!" - கே.எஸ்.அழகிரி கிண்டல்

சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான தி.மு.க-வைச் சேர்ந்த் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பாக கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, " நம்முடைய கூட்டணி கொள்கை ரீதியாக அமைந்த கூட்டணி. சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது.  தி.மு.க தலைவர் ஸ்டாலின்தான் இந்தக் கூட்டணிக்கு தலைமைதாங்குகிறார். மூன்று மணி நேரத்தில் கூட்டணியை முடிவுசெய்து, தொகுதிகளையும் முடிவுசெய்தோம். அதற்குக் காரணம், ஸ்டாலினின்  சொல்லாற்றலும் செயலாற்றலும், ராஜதந்திரமும்தான்.  நம் கூட்டணிக் கட்சிகள் எல்லோரும் கொள்கை ரீதியாகவே நம்முடன் இருக்கிறார்கள். மதச் சார்புள்ள மோடியை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் நம் அனைவருடைய ஒரே நோக்கம். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, இப்போது சூலூரில் மேடையில் அமர்ந்திருக்கிறது என்று ப.சிதம்பரத்தைப் பார்த்து நெகிழ்ந்து சொன்னவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் ஆகியோரின் ஆலோசனைகளோடு சூப்பர் ஹீரோவான காங்கிரஸின்  தேர்தல் அறிக்கையைப் ப.சிதம்பரம்தான் வெளியிட்டிருக்கிறார்.

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு, அந்தக் குடும்பத்தின் பெண்கள் பெயரிலேயே மாதம் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இவ்வளவு பெரிய  சமூக நலத்திட்டத்தை  வேறு யாரும் செயல்படுத்தியது கிடையாது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியானதுமே பி.ஜே.பி-யின் வீழ்ச்சி துவங்கிவிட்டது. பி.ஜே.பி, இது வாக்குகளுக்காகச் சொல்லப்பட்டது என்கிறார்கள். காங்கிரஸ் என்பது ஒரு பேரியக்கம். அதனை  தனி மனிதர் யாரும் வழிநடத்தவில்லை. பி.ஜே.பி-யினர், ஏழைகள்மீது இறக்கமில்லாதவர்கள், எளியோர்களின் வாழ்வைப் புரிந்துகொள்ளாதவர்கள். வரப்பே தலையணை வைக்கோலே பஞ்சு மெத்தை என்றிருக்கும் மக்களின் வாழ்வைப் பற்றி கவலைப்படாதவர்கள். 

500 ரூபாய்,1000 ரூபாய்  நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தாரே... அதனால் நாட்டிற்கு ஏதேனும் நன்மை கிடைத்ததா? அதனால் ஏற்பட்ட பாதிப்புகள்தாம் அதிகம். அதனால் சிறுதொழில்கள்  நசுங்கின. மக்கள் நலனுக்காக பி.ஜே.பி அரசு ஒரு சிறந்த காரியத்தைக்கூடச் செய்யவில்லை. வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் போடுகிறேன் என்றாரே மோடி… போட்டாரா..? இல்லை. அந்த நேரத்தில் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ஒரு பொய்யைச் சொன்னார்.  60 ஆண்டுகாலம் ஆட்சிசெய்தீர்களே...  நீங்கள் சரியாகச் செயல்படாததால்தான் இன்னும் வறுமை இருக்கிறது என தமிழிசை சொல்கிறார். நம் தேசிய ரத்தம் ஓடுகிற பெண்மணி இப்படிச் சொல்லியிருப்பது வேதனை. வரலாறு தெரியாமல் அப்படிச் சொல்லியிருக்கிறார். உலகத்தில் எந்த நாட்டிலும் இவ்வளவு விரைவாக வறுமை ஒழிக்கப்படவில்லை

ஐம்பதாயிரம் ஆண்டுகளாக இங்கே தீண்டாமை இருக்கிறது. சாதிய  வன்கொடுமைகள் நடக்கிறது.  தலையில் ஒருவன் பிறந்தான் காலில் ஒருவன் பிறந்தான் என்று சொல்லி, அதற்கு நீதி என்றும் மனுநீதி என்றும் சொல்கிறவர்கள் இங்கே இருக்கிறார்கள். இதற்கு மத்தியில் 60 ஆண்டுகளுக்குள்ளாக விரைவாக வறுமையை ஒழித்திருக்கிறோம் என்று தமிழிசை விமர்சனத்திற்கு செக் வைத்தவர்,

மாநிலங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்போம் என்று  ராகுல் சொல்லியிருக்கிறார்.  மோடி, அதிகாரத்தைக் குவித்து வைத்துள்ளார்
 அ.தி.மு.க, ஜெயலலிதா இருந்தபோதோ எம்.ஜி.ஆர் இருந்தபோதோ இருந்த இயக்கம் கிடையாது. அந்தக் கட்சிக்கு இப்போது சுயமரியாதையும் கிடையாது. மாநில உரிமைகள் குறித்த அக்கறையும் கிடையாது. இந்தச் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், இந்தியா மோடியின் கையில் பத்திரமாக இருக்கிறது என்று. எடப்பாடிக்கு இந்தியாவையும் தெரியாது. தமிழ்நாட்டையும் தெரியாது. அவருக்குத் தெரிந்ததெல்லாம் சேலம் மட்டும்தான். எடப்பாடி மட்டும்தான். வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம் . 'மோடியின் கையில் எடப்பாடி பத்திரமாக இருக்கிறார்'  என்றவர், அ.தி.மு.க ஆட்சியை அகற்ற தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு வாக்களிக்குமாறு  வேண்டுகோள் வைத்து அமர்ந்தார்.

``எடப்பாடிக்கு இந்தியாவையும் தெரியாது, தமிழ்நாட்டையும் தெரியாது!" - கே.எஸ்.அழகிரி கிண்டல்

பின்னர் கூட்டத்தில் முதலில் பேசிய எ.வ.வேலு, "இந்த தேர்தல்  பணநாயகத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தேர்தல். கோடிக்கோடியாக கொள்ளையடித்துக் கொள்ளையடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கொள்ளையடித்தப் பணத்தை வைத்துக்கொண்டு தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று அ.தி.மு.க நினைக்கிறது.

இந்த மேடையில் இருப்பவர்களை நான் பார்க்கிறேன்... இதற்கு முன்பு  நாம் ஒன்றாக இருந்து 40 தொகுதிகளையும் கைப்பற்றினோம். அதேபோல் இந்த தேர்தலிலும் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். கலைஞர் வழியில், ராகுல்தான்  பிரதமர்  என்று முதன்முதலாக தளபதி ஸ்டாலின்தான் முன்மெழிந்தார். இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறபோகிறது. இந்த சூழலில் இங்கே கோடிகோடியாக கொள்ளையடிக்கிற ஆட்சியை நாம் மாற்ற வேண்டாமா? அந்த ஆட்சி மாற்றத்திற்கு சூலூர் சட்டமன்ற தொகுதி தேவை. ஒவ்வொரு ஊடகங்களும் ஒவ்வொரு மாதிரியான ஊடகங்கள் சொல்லும் கருத்துக் கணிப்புகளை நான் நம்புவதில்லை. நாங்கள் தொகுதி தொகுதியாகச் செல்கிறோம்; மக்களை சந்திக்கிறோம் எங்களுக்குத் தெரியாதது ஊடகங்களுக்கு  என்ன தெரியப்போகிறது.?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அப்படித்தான் அ.தி.மு.க ஆட்சிக்கு அமைச்சர் வேலுமணி ஒருவர் பதம். தமிழகத்தில் ஏன் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு வேலுமணி தயாராக இருக்கிறாரா? ஏன் நடத்தவில்லை. தேர்தல் நடத்திவிட்டோம் என்று சொன்னால்? உள்ளூர் பிரச்னைகளை தீர்க்கின்ற அதிகாரம் உள்ளாட்டி பிரதிநிகளுக்குச் சென்றுவிடும். இதில் உள்ள சூட்சமத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

உதாரணத்திற்கு சாலையில் மின் கம்பத்தில் பொருத்தப்படும் எல்.இ.டி பல்ப்-ன் விலை 1,500 ரூபாய். ஆனால், 6,500 ரூபாய்  என்று கணக்குக் காட்டுகிறார்கள். இப்படி ஒவ்வொன்றிலும் கொள்ளையடித்த  பணத்தை வைத்துதான் நம்மை மிரட்டுகிறார்கள். சூலூர் மக்களாகிய உங்களை நம்பிச் சொல்கிறேன் அவர்களின் கோடிகளை வைத்து ஜனநாயகத்தை வீழ்த்த முடியாது. இந்த ஆட்சியை அப்புறப்படுத்த தி.மு.க வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்" என்று முடித்தார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு