Published:Updated:

`செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர்?' - பிரசாரத்தில் விவரித்த எடப்பாடி பழனிசாமி

துரை.வேம்பையன்
`செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர்?' - பிரசாரத்தில் விவரித்த எடப்பாடி பழனிசாமி
`செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர்?' - பிரசாரத்தில் விவரித்த எடப்பாடி பழனிசாமி

"மத்திய அரசின் உதவியுடன் கோதாவரி - காவிரி ஆறு இணைப்பு திட்டத்துக்கு, 60 கோடி நிதி ஒதுக்கி நிறைவேற்றப்படும்" என்று தேர்தல் பரப்புரையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

`செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர்?' - பிரசாரத்தில் விவரித்த எடப்பாடி பழனிசாமி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, அ.தி.மு.க வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது கட்டமாக பிரசாரம் மேற்கொண்டார். வெஞ்சமாங்கூடலூர், இனங்கூர், ஆண்டிப்பட்டிக் கோட்டை, குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "நடைபெறுகின்ற சட்டமன்றத் இடைத்தேர்தல் யாரால் வந்தது என்பது பொதுமக்கள் எல்லோருக்கும் தெரியும். அதே துரோகிதான், தி.மு.க கட்சிக்குச் சென்று,  தற்போது வேட்பாளராகப் போட்டியிடுகிறார். முதன்முதலில், ம.தி.மு.க-வில் இருந்து, பின்னர் தி.மு.க-வில் கவுன்சிலராகி, பின்னர் அ.தி.மு.க ஆட்சியில் எம்.எல்.ஏ ஆனதோடு, அமைச்சராகி, பின்னர் அங்கிருந்து அ.ம.மு.க சென்று, தற்போது தி.மு.க-வில் ஐக்கியமாக்கியுள்ளார். 5 ஆண்டுகளுக்குள், 3 கட்சிக்கு மாறியவர்தான் இந்த செந்தில் பாலாஜி. கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு கட்சிகளில் நின்ற ஒரே வேட்பாளர் இந்த செந்தில் பாலாஜிதான். சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் இந்த செந்தில் பாலாஜி. பொதுமக்களுக்கும் துரோகம் செய்வார். அவரை இந்த நாட்டுக்கு அடையாளம் காட்டியது மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான்.

`செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர்?' - பிரசாரத்தில் விவரித்த எடப்பாடி பழனிசாமி

ஆனால், அந்தக் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் இந்த செந்தில் பாலாஜி. ஆனால், கடந்த முறை இதே அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றபோது, செந்தில் பாலாஜி நன்றி சொல்லகூட விரும்பவில்லை. ஆனால், எங்களது அ.தி.மு.க வேட்பாளர் 2011-ம் ஆண்டில் இதே அரவக்குறிச்சி தொகுதியில் இதே செந்தில் பாலாஜியினால் மறைமுகமாகத் தோற்கடிக்கப்பட்டார். ஆனாலும், தோல்வியுற்றாலும், நன்றி சொல்ல வந்தவர்தான் இந்த அ.தி.மு.க வேட்பாளர் செந்தில் நாதன். இங்கே எதிர்த்து நிற்கும், தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி நல்லவர் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதே மு.க.ஸ்டாலின், 2011-ம் ஆண்டு, சட்டமன்றத்தில் போக்குவரத்துத் துறையில் மோசடி என்று கூறி, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முயன்று, பின்னர் வெளிநடப்பு செய்த இதே மு.க.ஸ்டாலின், சட்டசபையில் வெளிவந்தார். பின்னர் பத்திரிகையாளர்களிடம், 'செந்தில் பாலாஜி, ஆள்கடத்தல் பேர்வழி செந்தில் பாலாஜி என் தகுதி பற்றி பேச தகுதியில்லை' என்று கூறியதை அவரது கட்சி பத்திரிகையே சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த நாளிதழின் நகலை மக்களிடமும் பத்திரிகையாளர்களிடம் காண்பித்து பேச ஆரம்பித்தார். அதே வழக்குதான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதே ஆள்கடத்தல் வழக்கைத்தான், நான் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தேன். ஆகவே, 'ஆள்கடத்தல் செந்தில் பாலாஜி பார்த்துதான் வாக்குகள் அளிக்க வேண்டும்' என்று அன்று பேசிய ஸ்டாலின் நாக்கு இன்று பேச மறுக்கிறது. ஆகவே, அப்படிப்பட்ட ஆள்தான் தி.மு.க வேட்பாளர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல்தான் அந்த கட்சி வேட்பாளர் எப்படியோ, அப்படிதான் அந்தக் கட்சியும். மக்களுக்காகப் பல நல்லதிட்டங்களை நாங்கள் தீட்டி வரும் நிலையில், அந்தத் திட்டங்களை நிறுத்துவது என்றால் இந்திய அளவில் ஒரே தலைவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான். செந்தில் பாலாஜி 25 ஆயிரம் குடும்பங்களுக்கு, 3 சென்ட் நிலம் கொடுப்பதாகக் கூறுகிறார். அப்படி பார்த்தால், எங்கு நிலம் இருக்கின்றது. அதற்கு 1100 ஏக்கர் தேவை, பொது இடம், பாதை போடுதல் உள்ளிட்டவைகள் எல்லாம் சேர்ந்து தேவைப்படுகின்றது.

`செந்தில் பாலாஜி எப்படிப்பட்டவர்?' - பிரசாரத்தில் விவரித்த எடப்பாடி பழனிசாமி

இந்நிலையில், தொகுதியில் அவ்வளவு நிலத்தை எங்கே வாங்குவார்கள்? ஏற்கெனவே, கருணாநிதி இருக்கும்போது, 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாகக் கூறி பொதுமக்களுக்கு நாமம் சார்த்தினார். அதேபோல், அந்த ஆட்சியில் சுடுகாட்டுக்குகூட நிலம் கொடுக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சொந்தமாக செந்தில் பாலாஜி நிலம் கொடுப்பாரா? அப்படிப் பார்த்தால், 1100 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு செந்தில் பாலாஜியிடம் ஏது பணம்? இதே செந்தில் பாலாஜி, முதன்முறையாகப் போட்டியிடும்போது, வேட்புமனு தாக்கலின்போது சொத்து மதிப்பீடு எவ்வளவு, இப்போது எவ்வளவு, ஆக இவ்வளவு சொத்து அவருக்கு எப்படி வந்தது? எப்போதும் பொய்யைச் சொல்வதுதான் தி.மு.க. ஆனால், ஆளுகின்ற அ.தி.மு.க அரசு, வீட்டுமனைப்பட்டாக்கள் இல்லாதவர்களுக்கு நிலமும் அதில் வீடு கட்டியும் தருகிறது. கோதாவரி- காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசின் உதவியுடன், 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்" என்றார்.
 

Vikatan