`கமல், உங்களுக்கு ஒரு அட்வைஸ்!'‍ - பிரசாரத்தில் பிரேமலதா | Premalatha's advice to Kamalhassan

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (15/05/2019)

கடைசி தொடர்பு:10:18 (16/05/2019)

`கமல், உங்களுக்கு ஒரு அட்வைஸ்!'‍ - பிரசாரத்தில் பிரேமலதா

“தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் - ஸ்டாலின் சந்திப்பால் மூன்றாவது அணி அமைவதற்கு நிச்சயமாகச் சாத்தியம் இல்லை” எனப் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

பிரேமலதா பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் மோகனை ஆதரித்து கூட்டணிக்கட்சி தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கப்போவது இல்லை. இந்தத் தேர்தலில் தி.மு.க-வால் வெற்றி பெற முடியாது என்பது ஸ்டாலினுக்குத் தெரிந்துவிட்டது.

எனவே, வெளியிலிருந்து ஆதரவு கொடுத்தாவது பி.ஜே.பி கூட்டணியில் இணைந்துவிடலாம் என நினைக்கிறார். உறுதியாக அதற்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் எனது கருத்து. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஸ்டாலின் சந்திப்பால் மூன்றாவது அணி அமைவதற்கு நிச்சயமாகச் சாத்தியம் இல்லை. மதம், சாதி ரீதியாகப் பேசும்போது யாராக இருந்தாலும் யோசித்துப் பேச வேண்டும். கமல்ஹாசன் பேசி இருக்கிறார் என்றால் அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும்கூட, பிறப்பால் அவர் ஒரு இந்துதான்.

எந்த ஒரு மதமாக இருந்தாலும் சரி, அடுத்தவர் மனது புண்படும்படி பேசக் கூடாது. அவ்வாறு கருத்து தெரிவிப்பதை யாரும் வரவேற்க மாட்டார்கள். இன்று நாடு துண்டாடப்படுவது என்பதே மதத்தையும்  ஜாதியையும் வைத்துதான். அதற்கு கமல் போன்றவர்கள் வழிவகுக்கக் கூடாது என்பதுதான் எங்களது கருத்து'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க