Published:Updated:

`முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாதவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்!' - உதயநிதி ஸ்டாலின்

`முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாதவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்!' - உதயநிதி ஸ்டாலின்
`முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாதவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்!' - உதயநிதி ஸ்டாலின்

``10 மாத குழந்தையைப்போல தவழ்ந்து சென்று, காலில் விழுந்து முதல்வரானவர் எடப்பாடி. அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இது எடப்பாடி ஆட்சி அல்ல. டெட்பாடி ஆட்சி. சவப்பெட்டியில் பாடியை வைத்து கடைசியில் 4 ஆணி அடிப்பார்கள். அந்த 4 ஆணியில் ஒரு ஆணிதான் நீங்கள்'' என்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின்போது பேசினார்.

`முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாதவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்!' - உதயநிதி ஸ்டாலின்

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட புஞ்சைதோட்டக்குறிச்சி பேரூராட்சி மூர்த்திபாளையத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்குக் கேட்டு வேன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,
 "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் வாக்களித்து முதல்வரானவர் அல்ல. குறுக்கு வழியில் முதல்வரானவர்.

`முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாதவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்!' - உதயநிதி ஸ்டாலின்

10 மாத குழந்தையைப்போல தவழ்ந்து சென்று, காலில் விழுந்து முதல்வரானவர். அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இது எடப்பாடி ஆட்சி அல்ல. டெட்பாடி ஆட்சி. சவப்பெட்டியில் பாடியை வைத்து கடைசியில் 4 ஆணி அடிப்பார்கள். அந்த 4 ஆணியில் ஒரு ஆணிதான் நீங்கள். மோடியை வீட்டுக்கு அனுப்புவதை உறுதி செய்துவிட்டீர்கள். எடப்பாடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் 22 தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் செந்தில் பாலாஜியை வெற்றி பெற செய்ய வேண்டும். வரும் ஜூன் 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளன்று, தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்கும் அரிய வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா ஆட்சி, ஜெயலலிதா வழியில் நடக்கும் ஆட்சி என வார்த்தைக்கு வார்த்தை கூறுகின்றனர். 

`முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாதவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்!' - உதயநிதி ஸ்டாலின்

ஆனால், ஜெயலலிதா எப்படி இறந்தார் என்றே தெரியவில்லை. 75 நாள்கள் மருத்துவமனையில் அமைச்சர்கள் அவரை அடைத்து வைத்திருந்தனர். அவர் இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறிய ஓ.பி.எஸ், விசாரணை கமிஷனில் இன்னும் ஆஜராகவில்லை. ஒரு முதல்வருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாதவர்களை வீட்டுக்கு அனுப்புவோம். உங்கள் உரிமைகளைப் பாதுகாக்க, நீட் தேர்வு, கல்விக் கடன், விவசாயக் கடன்களை ரத்து செய்ய, ரயில் பாஸ் பெற, ஜி.எஸ்.டியை மாற்றியமைக்க, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தை 150 நாள்களாக அதிகரிக்க வைக்க, பெட்ரோல், டீசல், காஸ் விலையைக் கட்டுப்படுத்த, 5 பவுனுக்குட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட, இப்பகுதியில் குடிநீர் பிரச்னை தீர, நொய்யல் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு பெற என்று பல பிரச்னைகள் தீர, வரும் மே 19-ம் தேதி நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் செந்தில் பாலாஜிக்கு வாக்களியுங்கள். மிக விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் முதல்வராக அமருவார். உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் தீர்ப்பார்" என்றார்.