Published:Updated:

``அப்போதும் இதையேதான் சொன்னார்கள்... ஆனால்..!” - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து முதல்வர்

வீ கே.ரமேஷ்
``அப்போதும் இதையேதான் சொன்னார்கள்... ஆனால்..!” - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து முதல்வர்
``அப்போதும் இதையேதான் சொன்னார்கள்... ஆனால்..!” - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் பணிகளை முடித்து விட்டு இரண்டு நாள்கள் சேலத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் இருப்பதற்காக வந்திருந்தார். முன்னதாக சேலம் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

``அப்போதும் இதையேதான் சொன்னார்கள்... ஆனால்..!” - கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து முதல்வர்

அப்போது அவர், ``அ.தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். 2016 -ல் சேலத்தில் 3 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெறும் மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும் என்றார்கள். அது பொய்யாகப் போனதைப் போல இந்த முறையும் தி.மு.க வெற்றி பெறும் என்று சொல்லும் கருத்துக் கணிப்புகள் பொய்யானதாகப் போகும். தற்போது சொல்லும் கருத்துக் கணிப்புகள் என்பது கருத்துக் கணிப்பு அல்ல. கருத்துத் திணிப்பு. கருத்துக் கணிப்புகள் பொய்யாகும். அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். 

விபத்துகளைத் தவிர்ப்பதற்கும், தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கும் சாலைகள் அவசியம். தி.மு.க ஆட்சியில் 786 கி.மீட்டர் சாலைகள் எப்படிப் போட்டார்கள். இன்று நீங்களும், நானும் நடப்பதற்கு சாலை எவ்வளவு முக்கியமானது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். மக்களின் நலனைக் கருதியே சாலைகள் கொண்டு வருகிறோம். சாலைகள் விரிவாக்கம் செய்யவில்லையென்றால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். உயிர் முக்கியமா? விளை நிலங்கள் முக்கியமா? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சேலம் டு  சென்னை 8 வழி பசுமை சாலைக்கு வெறும் 7% பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். பசுமையான நிலம் உடையவர்கள் கூட எதிர்ப்பதில்லை. வறட்சியில் உள்ளவர்கள் சிலர் எதிர்க்கிறார்கள்.

ராஜீவ் கொலை குற்றச்சாட்டில் உள்ளே உள்ளவர்களை விடுதலை செய்வதில் மறைந்த முதல்வர் கருணாநிதி எப்படி நடந்து கொண்டார் என்பது தெரியும். நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என்று மறைந்த முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை முடிவு எடுத்தது. நாங்கள். ராஜீவ் கொலை வழக்கில் சிறைக்குள் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென அமைச்சரவை கூடி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மாண்புமிகு ஜனாதிபதிக்கு அனுப்பி இருக்கிறோம். அவர் விடுதலை செய்வார். சென்னையில் குடிநீர் பிரச்னையைப் போக்க தேவைப்பட்டால் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்போம்” என்றார், 

Vikatan