தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll | 2004 - 2019 LokSabha Election Exit Poll opinion!

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (21/05/2019)

கடைசி தொடர்பு:13:29 (21/05/2019)

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் கூட்டணி ஆட்சியும்... #VikatanInfographics #ExitPoll

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, இந்தியாவில் இந்த ஆண்டு (2019) மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை வேலூர் தவிர 542 தொகுதிகளில், ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, மே 23-ம் தேதி நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, பி.ஜே.பி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெறும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

2009-ம் ஆண்டில் வெளியான கருத்துக்கணிப்பின்படி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. அப்போது பி.ஜே.பி 159 இடங்களையும், காங்கிரஸ் 262 இடங்களையும், மற்ற கட்சிகள் 79 இடங்களையும் பிடித்தன. 2014-ம் ஆண்டு தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி பி.ஜே.பி தேர்தலைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் 'பி.ஜே.பி-தான் வெற்றிபெறும்' என்று கணிப்புகள் வெளியாகின. அதன்படி, பி.ஜே.பி. 339 இடங்களையும், காங்கிரஸ் 59 இடங்களையும், மற்ற கட்சிகள் 148 இடங்களையும் பிடித்தன.

கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலும் வெளியான கருத்துக் கணிப்புகளையும், தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளையும் பார்ப்போம்...

கருத்துக்கணிப்பு

தற்போது, ஐந்து ஆண்டுக் கால மோடி ஆட்சிக்குப் பின்னர் நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில், 'பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்' என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. 'கருத்துக்கணிப்புகள் எல்லாம் பொய்' என விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர். இதுதொடர்பாக, அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "கருத்துக் கணிப்புகள் எல்லாம் தவறானவை. ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்புகளில் 56 கருத்துக் கணிப்புகள் தவறாக வெளிவந்துள்ளன. உண்மையான தேர்தல் முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளிவர இருக்கின்றன. அதுவரை பொறுத்திருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

கருத்துக்கணிப்பு

தமிழகத்தைப் பொறுத்தவரை, 'தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும்' என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்