``மக்களின் முடிவுக்கு நான் சாயம் பூச விரும்பவில்லை!" - ராகுல் காந்தி பேச்சு #Electionresults2019 #LiveUpdates | loksabha election results 2019 - live updates

வெளியிடப்பட்ட நேரம்: 06:46 (23/05/2019)

கடைசி தொடர்பு:18:01 (23/05/2019)

``மக்களின் முடிவுக்கு நான் சாயம் பூச விரும்பவில்லை!" - ராகுல் காந்தி பேச்சு #Electionresults2019 #LiveUpdates

மக்களவைத் தேர்தல் முன்னணி நிலவரம்!

பா.ஜ.க கூட்டணி : 348

காங்கிரஸ் கூட்டணி: 90

மற்றவை:  104

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அபார முன்னிலையில் உள்ளது, இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி, ``மக்களின் முடிவுக்கு நான் சாயம் பூச விரும்பவில்லை. மோடிக்கு எனது வாழ்த்துகள். அமேதியில் என்னை விழ்த்திய ஸ்மிரிதி இராணிக்கும் என்னுடைய வாழ்த்துகள். மக்கள் மீதான எனது அன்பு தொடரும்” என்றார். 

சிதம்பரம் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த திருமாவளவன், தற்போது முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போது அவர் சுமார் 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, ``தமிழகத்தில் திமுக பெற்றுள்ள வெற்றி  பலன் தராது. தமிழக மக்கள் ஊழல் செய்யாத பாஜகவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டார்கள்; பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என உணர்வார்கள்; மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் உணர்ந்து வாக்களித்துள்ளார்கள்” என்றார்

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்தி பா.ஜ.க அலுவலகங்களில் கொண்டாட்டம் களைக் கட்டியுள்ளது. இனிப்புகளை வழங்கியும். பட்டாசுகளைவெடித்தும் பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 

 

அமேதி தொகுதியில் ராகுல் பின்னடைவை சந்தித்தாலும் கேரளாவின் வயநாடு அவருக்கு கைகொடுத்துள்ளது. தற்போது வரை ராகுல் சுமார் 8 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். 

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பிரதமர் மோடி 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெறும் நிலையில் இருக்கிறார்.  

தேர்தல் முடிவு தொடர்பாக ட்வீட் செய்துள்ள மோடி, ``நாம் ஒன்றாக வளர்கிறோம். ஒன்றாக நாம் ஒளிர்வோம். ஒன்றாக நாம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது” என பதிவிட்டுள்ளார், 

``மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள் . நீங்கள் சாதித்துவிட்டீர்கள்” என மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். முன்னதாக தேர்தல் முடிவுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்திய குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய நிலவரப்படி 542 தொகுதிகளில் முன்னிலை நிலவரம்...

பா.ஜ.க - 294
காங்கிரஸ் - 52
தி.மு.க - 22
திரிணாமுல் காங்கிரஸ் - 23
YSR காங்கிரஸ்  - 23
சிவசேனா -19
ஐக்கிய ஜனதா தளம் - 15
பிஜு ஜனதா தளம் - 15
பகுஜன் சமாஜ் - 12

வாக்குகள் முன்னிலை (அதிக எண்ணிக்கை ) 

அமித் ஷா  (பாஜக) காந்தி நகர், குஜராத்-  4,32,000
பட்டீல் (பாஜக), நவ்சாரி , குஜராத் - 3,10,000
கல்யாண்ஜிபாய் , ராஜ்கோட், குஜராத்-  3,30,000
தர்ஷான விக்ரம் சர்ஜோஷ், சூரத், குஜராத்-  3,70,000
 வஜேசிங் பாய்,  சோட்டா உதய்பூ,ர் குஜராத் - 3,20,000

வாக்குகள் முன்னிலை (அதிக எண்ணிக்கை ) தமிழ்நாடு

திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) - 2,90,000
பாரிவேந்தர் (திமுக) - 2,65,000
கௌதம் சிகாமணி (திமுக) - 2,00,000
வேலுசாமி (திமுக) -2,00,000

 

பா.ஜ.க. 50%  வாக்குகள் பெற்றுள்ள மாநிலங்கள்:

இமாச்சல் பிரதேசம் - 68.8%
குஜராத் - 61.7%
உத்தரகாண்ட் - 60.1%
உத்தரப் பிரதேசம் - 59%
மத்திய பிரதேசம் - 58.5%
ராஜஸ்தான் - 58.4%
ஹரியானா - 58%
டெல்லி - 56.7%
கர்நாடகா - 51.7%
சட்டிஸ்கர் - 49.7%
ஜார்கண்ட் - 49.2%

மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு டெல்லியில்  பா.ஜ.க ஆலோசனை நடத்துகிறது. இதில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தேசிய அளவில் அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கும் கட்சிகளில் தி.மு.க 5 -வது இடத்தில் இருக்கிறது. முதல் 4 இடங்களில் பா.ஜ.க(292), காங்கிரஸ்(51), திரிணாமூல் காங்கிரஸ்(25) மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்(24) ஆகியகட்சிகள் உள்ளன.  

 

அன்புமணி பின்னடைவு!

தருமபுரியில் முன்னணியில் இருந்து வந்த அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளார். தற்போது அவர் 600 வாக்குகள் பின் தங்கி இருக்கிறார். 

  அன்புமனி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமேதி தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டிருந்தலும் கேரளாவின் வயநாட்டில் ராகுல் சுமார் 2 லட்சம் வாக்குகள் முன்னிலையுடன் இருக்கிறார்.  

தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி 542 தொகுதிகளில் கட்சிகளின் முன்னிலை நிலவரம்...
பா.ஜ.க. - 288
காங்கிரஸ் - 51
தி.மு.க.  -22
திரிணாமுல் காங்கிரஸ்  - 25
YSR காங்கிரஸ்  -24
சிவசேனா  -20

 

தேர்தல் ஆணைய இணையதளத்தின் நிலவரப்படி ராகுல் காந்தி வயநாட்டில்  1,46,000 வாக்குகள் முன்னிலை, அமேதியில் 3,500 வாக்குகள் பின்னடைவு

உத்தரபிரதேச மாநிலம் வாரணசியில் மோடி ஒரு லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநில வயநாட்டில் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேல் முன்னிலையில் இருக்கிறார், 

கேரளாவில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பா.ஜ.க பின்னடைவை சந்தித்துள்ளது. 

மீண்டும் தனி மெஜாரிட்டியில் பா.ஜ.க?

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி தனி கட்சியாக பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க 282 இடங்களிலும், காங்கிரஸ் 51 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்களே தேவை!

 

தமிழக மக்களவைத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி அனைத்து தொகுதிகளின் முன்னணி நிலவர வெளியாகியுள்ளது. அதில் தி.மு.க கூட்டணி 37 இடங்களிலும் அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னணியில் உள்ளது, 

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவ் மைன்பூரி தொகுதியில் பின்னடைவு. அவர் மூன்று முறை வென்ற தொகுதி மைன்பூரி என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் 16,936 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார். மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் பின்னைடைவு! 

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் ஐந்து  சுற்று நிலவரப்படி திருமாவளவன் 286 வாக்குகள் முன்னனியில் உள்ளார்.

அமேதியில் பா.ஜ.க  வேட்பாளர் ஸ்ம்ரிதி இரானி 2,000 வாக்குகள் முன்னிலை. ராகுல் காந்திக்கு தொடர்ந்து பின்னடைவு.
 

பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு பின்னடைவு!

தேனி நாடாளுமன்ற தொகுதியில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்! 

இரட்டை சதம் அடித்த பாஜக!

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வெளியான முன்னணி நிலவரங்கள் படி பா.ஜ.க 200 இடங்களுக்கு மேல் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 88 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மூத்த காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங் (போபால்), சிந்தியா , விவேக் தன்கா (ஜபல்பூர்)  மூவரும் பின்னடைவு

ராகுல் காந்தி பின்னடைவு!

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வயநாடு தொகுதில் ராகுல் முன்னிலையில் இருக்கிறார்.  


தி.மு.க முன்னிலை!

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை பெற்றுள்ளார். நீலகிரியில் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசா முன்னிலையில் உள்ளார்.  தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 8 மக்களவைத்தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அதிமுக இன்னுன் தனது கணக்கை தொடக்கவில்லை. 

பாஜக முன்னிலை!

தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முன்னணி நிலவரம் வெளியான 27 தொகுதிகளில் பாஜக கூட்டணி 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி  7 இடங்களிலும் முன்னணியில் உள்ளது, 

முன்னணி நிலவரம்

தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் முன்னணி நிலவரங்கள் தெரிய வரும்!

கரூர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக தலைமை முகவர் காளியப்பனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கட்சி பொறுப்புடன் கூட்டுறவு பண்டக சாலைத் தலைவராகவும் காளியப்பன் இருப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அளித்த புகாரின் அடிப்படையில் காளியப்பனுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகிறது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. இந்நிலையில் இந்தியாவில் 273 தொகுதிகளில் பா.ஜ.க காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரடியாக களத்தில் உள்ளனர்.

பாஜக காங்கிரஸ்

கட்சியின் முகவர் வாக்கு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டர் வெளியே சென்றால் அவருக்கு மீண்டும் அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் மோடியா... அல்லது ராகுல் காந்தி முதல் முறையாகப் பிரதமர் ஆவாரா...? தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இருக்குமா..? இப்படிப் பல கேள்விகளுக்கு இன்று விடை கிடைக்கும் நாள். காலை 8 மணி முதல் நாடு முழுவதும் பதிவான  வாக்குகள் எண்ணப்படவுள்ளது. 

தபால் வாக்குகள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலிருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்குத் தபால் வாக்குகள் கொண்டுவரப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அரசியல் கட்சியினர் கட்சிக்கொடி கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 தேர்தல் ஆணையம்

நாடு முழுவதும் 17வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 90.99 கோடியாக இருந்தது. மொத்த வாக்குப்பதிவு 67.11 சதவிகிதம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அவற்றில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள 542 மக்களவைத் தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான  வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன. அதற்கு முன்பாக தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற இருக்கிறது.