Published:Updated:

`வருத்தமாகத்தான் இருக்கிறது; ஆனாலும் ஹேப்பி'- எடப்பாடியை ஆறுதல்படுத்திய ஓபிஎஸ் 

`வருத்தமாகத்தான் இருக்கிறது; ஆனாலும் ஹேப்பி'- எடப்பாடியை ஆறுதல்படுத்திய ஓபிஎஸ் 
`வருத்தமாகத்தான் இருக்கிறது; ஆனாலும் ஹேப்பி'- எடப்பாடியை ஆறுதல்படுத்திய ஓபிஎஸ் 

`வருத்தமாகத்தான் இருக்கிறது; ஆனாலும் ஹேப்பி'- எடப்பாடியை ஆறுதல்படுத்திய ஓபிஎஸ் 

`வருத்தமாகத்தான் இருக்கிறது; ஆனாலும் ஹேப்பி'- எடப்பாடியை ஆறுதல்படுத்திய ஓபிஎஸ் 

தேர்தல் முடிவுகளைப் பார்த்துக்கொண்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், `மக்களவைத் தேர்தல் முடிவுகள் நமக்கு பாதகமாக இருந்தாலும் இடைத்தேர்தல் முடிவுகள் நமக்கு ஆறுதலை அளிக்கிறது' என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கான விடை இன்று தெரிந்துவிடும். தமிழகத்தை பொறுத்தவரை 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதனால் தமிழகத்தில் நடந்துவரும் அ.தி.மு.க. ஆட்சி கவிழுமா இல்லை தொடருமா என்ற கேள்வி எழுந்தது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் எம்.பி.க்கள் தேர்தல் முடிவைவிட எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் முடிவைத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி அமைச்சர்கள், கட்சித் தொண்டர்கள் வரை ஆவலுடன் எதிர்பார்த்தனர். 

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி 36 இடங்களில் முன்னிலையில் இருந்துவருகிறது. இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. மீதமுள்ள 10 தொகுதிகளில் அ.தி.மு.க. முன்னிலையில் இருக்கிறது. அதைப்பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆறுதல் அடைந்துள்ளனர். 

`வருத்தமாகத்தான் இருக்கிறது; ஆனாலும் ஹேப்பி'- எடப்பாடியை ஆறுதல்படுத்திய ஓபிஎஸ் 

தேர்தல் முடிவுகள் குறித்தும் தொகுதியின் நிலவரங்கள் குறித்தும் அ.தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் விவாதித்தவண்ணம் உள்ளனர். வெற்றி முகத்திலிருக்கும் தி.மு.க.வினர், அறிவாலயத்தில் அதற்கான கொண்டாட்டத்துக்குத்  தயாராகிவருகின்றனர். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு போனிலும் நேரிலும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இடைத்தேர்தலைப் பொறுத்தவரை இதே நிலை நீடித்தால் அ.தி.மு.க. ஆட்சிக்கு எந்தவிதச் சிக்கலும் ஏற்படாது. ஜெயலலிதா இல்லாத இந்தத் தேர்தலில் இப்படியொரு முடிவு அ.தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு பாதிப்பு இல்லை என்பது அ.தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. ஆனால், தி.மு.க.வினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்தாலும் முழுமையாக அதைக் கொண்டாட முடியாத நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளனர். கூட்டணிக் கட்சியான காங்கிரஸிக்கு தேர்தல் முடிவு பாதகமாக அமைந்துள்ளது ஒரு காரணமாக இருந்தாலும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத சூழல் தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ``மக்களவைத் தேர்தல் முடிவைவிட இடைத்தேர்தல் முடிவுதான் எங்களுக்கு முக்கியமானது. அ.தி.மு.க.வின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் செயல்பட்டனர். ஆனால் அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. மெஜாரிட்டிக்கு தேவையான சீட்கள் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்பினோம். இடைத்தேர்தலில் 10 தொகுதிகளில் நாங்கள் முன்னிலையில் இருந்துவருகிறோம். அதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசித்தனர். முதல்வரிடம் துணை முதல்வர் பேசியபோது தேனி தொகுதி நிலவரத்தைக் கேட்டறிந்துள்ளார். அப்போது தேனி தொகுதியில் அ.தி.மு.க முன்னிலையில் இருக்கும் தகவலை மகிழ்ச்சியுடன் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

`வருத்தமாகத்தான் இருக்கிறது; ஆனாலும் ஹேப்பி'- எடப்பாடியை ஆறுதல்படுத்திய ஓபிஎஸ் 

இடைத்தேர்தலில் எந்ததெந்த தொகுதியில் அ.தி.மு.க. எவ்வளவு ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்பதை ஆவலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்ற கவலையில் முதல்வரும் துணை முதல்வரும் உள்ளனர். இந்தியாவில் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுகிறது. இதனால் பா.ஜ.க. தலைவர்களுக்கு முதல்வரும் துணை முதல்வரும் போனில் அட்வான்ஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டனர்" என்றார். 

பா.ஜ.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ``தேர்தல் முடிவுகள் குறித்து பத்திரிகைகள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் அப்படியே நிஜமாகியுள்ளன. மோடி மீண்டும் பிரதமராக உள்ளார். கடந்த தேர்தலைவிட பா.ஜ.க.வின் பலம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்துள்ளது. கடந்த தேர்தலில் கன்னியாகுமரியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்தங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்பார்த்த சீட்கள் கிடைக்கவில்லை" என்றார். 

 தி.மு.க. நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ``தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு எதிரான அலை வீசுவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. கடந்த 2004ல் நாற்பதுக்கு நாற்பது என்று வெற்றி பெற்றோம். கருணாநிதி உயிரோடு இல்லாத சமயத்தில் மீண்டும் அதுபோன்ற வெற்றி கிடைத்துள்ளது. முன்னிலை நிலவரம் மட்டும்தான் வந்துகொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுகள் நிச்சயம் எங்களுக்கு சாதகமாக அமையும்" என்றார். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு