பா.ஜ.க, தி.மு.க விஸ்வரூபம்!- ரஜினியின் அசம்பளி நகர்வு ஆலோசனை | rajini discussing regarding election

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (23/05/2019)

கடைசி தொடர்பு:12:21 (23/05/2019)

பா.ஜ.க, தி.மு.க விஸ்வரூபம்!- ரஜினியின் அசம்பளி நகர்வு ஆலோசனை

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்திவருகிறார்.

ரஜினி

நாடு முழுவதும் 17-வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. இதில், ஆளும் பா.ஜ.க அரசு 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலைபெற்று வருகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை 100 இடங்களைப் பிடிப்பதே பெரும்பாடாகியிருக்கிறது. தமிழகத்தில், தி.மு.க 37 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பெரும்பலான இடங்களில் மக்கள் நீதி மய்யம் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதனிடையே, சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டில் ராஜூமஹாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். `அரசியலுக்கு வருவது உறுதி’ என்று கூறி ரஜினி கட்சியைத் தொடங்காமல் காலம் தாழ்த்திவருகிறார். ஆனால் கமல், மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கி, மக்களவைத் தேர்தலையும் சந்தித்துவிட்டார்.

தேர்தலில் கமலுக்கு, மக்களிடையே எந்த வகையான வரவேற்பு கிடைத்துள்ளது, மக்கள் கட்சியை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்து கருத்துக்கேட்டு வருகிறார். மேலும், `தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்த்துவைக்கும் கட்சிகளுக்கு ஓட்டு போடுங்கள்’ என்று மறைமுகமாக பா.ஜ.க-வுக்கு ஆதரவளித்தார் ரஜினி. பா.ஜ.க, தற்போது அறுதிப்பெரும்பான்மையில் ஆட்சியைப் பிடிக்க உள்ள நிலையில், தனது சட்டமன்றத் தேர்தல் நகர்வுகள் குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசித்துவருவதாகக் கூறப்படுகிறது.