தேனியில் நீடிக்கும் குழப்பம்; வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு! | Vote counting stopped in theni

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (23/05/2019)

கடைசி தொடர்பு:14:50 (23/05/2019)

தேனியில் நீடிக்கும் குழப்பம்; வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு!

தேனி மக்களவைத் தொகுதியில் மிகப்பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இதனால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுள்ளது. 

தேர்தல்

தேனி நாடாளுமன்றத்தைச் சேர்ந்த உசிலம்பட்டி தொகுதி வாக்குகள் எண்ணபட்டன. இரண்டாவது சுற்று எண்ணும்போது, மூன்று வாக்குப்பெட்டியின் சீல் உடைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து வாக்குச்சாவடி முகவர்கள் கேட்டபோது, அதிகாரிகள் முறையாக பதிலளிக்கவில்லை. அதேபோல நம்பர் 65 வாக்குப்பெட்டி இருக்கும் இடத்தில் 208 என்று வாக்குப்பெட்டி மாறி வைக்கப்பட்டுள்ளது. 208 வது நம்பர் வாக்குப்பெட்டி இருக்கும் இடத்தில் வேற ஒரு பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது.

இதேபோலத்தான் ஆண்டிபட்டி தொகுதி வாக்குப்பதிவு எண்ணும் போது 3 இயந்திரங்களின் சீல் உடைக்கப்படுள்ளன. கம்பம் தொகுதியின் முதல் சுற்றில் எண்ணும் போது ஒரு பேட்டி சீரியல் நம்பர் வேறு பட்டிருந்தது. இதற்கும் கட்சி முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போல பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதால் தேனி நாடாளுமன்றத்தில் 3 சுற்றுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. நான்கு மற்றும் ஐந்து சுற்றுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

தங்க தமிழச்செல்வன்

இது தொடர்பாக விளக்கம் கேட்க தங்கதமிழ்ச் செல்வனும், ஈவிகேஎஸ் இளங்கோவனும் தேர்தல் நடத்தும் அலுவலர் பல்லவி பல்தேவ் சந்தித்துப் பேசினர். அப்போது பல்லவி,  ``வாக்குப்பதிவு இயந்திரம் பிரச்னை இருந்தால் பரவாயில்லை. விவிபேட் எண்ணிக்கை அடிப்பையில் ஒப்பிட்டுப் பார்த்து சரிசெயதுவிடலாம்” என்றார். அப்போது இருவரும் ``குறிப்பாக உசிலம்பட்டி தொகுதியில் ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டது. எத்தனை வாக்குகள் பதிவானது என்றே காட்டவில்லை.

இளங்கோவன்

 

எத்தனை என்று காட்டினால் தானே விவிபேட்டிகள் ஒப்பிடமுடியும்” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ``சரி பண்ணிடலாம்” என்று தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதால் இருவரும் அங்கிருந்து வெளியேறினர். பின் செய்தியாளர்களைச் சந்தித்தனர். தங்க தமிழ்ச்செல்வன் பேசுகையில், `ஒரு வாக்குச்சாவடியில் 15 முகவர்கள் எங்க கட்சிக்காரங்க இருந்தாங்க. வாக்குப்பெட்டியில் ஒரு ஓட்டும் இல்லை என்று காட்டுது 15 ஓட்டு எங்கே? முறையா தேர்தல் நடத்தப்படல. என் முகவர்களை வெளியேறச் சொல்லிருக்கேன’ என்றார் கோபமாக. 

இளங்கோவன், `கலெக்டரிடம் பிரச்னை குறித்து பேசினேன். தபால் ஓட்டுகள் 20 நிமிடம் தாமதமாகத்தான் எண்ணப்பட்டது. தபால் ஓட்டுகள் குறித்து முறையாக அறிவிக்கப்படவில்லை. வாக்கு எந்திரங்கள் சரி செய்வதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கூறினார்” என்றார்.
இதையடுத்து தங்க தமிழ்செல்வன் முகவர்களை வெளியேறுமாறு கூறி, பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் அவர்களை அங்கே இருக்கச் சொன்னார்.