Published:Updated:

`மோடிக்கு வாழ்த்து; மக்கள் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை!’- ராகுல் காந்தி

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க 300-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. பல மாநிலங்களில் 2014 தேர்தலைவிட அதிக இடங்களில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் சரிவை செய்துள்ளது. 50 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த முறை அமேதி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியைப் பரிசளித்துள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.

`மோடிக்கு வாழ்த்து; மக்கள் தீர்ப்புக்கு சாயம் பூச விரும்பவில்லை!’- ராகுல் காந்தி

 இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் ராகுல்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர்,  ``மோடிக்கும், பா.ஜ.க-வுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்கள் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்பியுள்ளனர். மக்களின் முடிவை வரவேற்கிறோம்.  மக்கள்தான் முடிவு எடுப்பார்கள் என்றேன் அது தற்போது நடந்துள்ளது. எனவே, மக்களின் இந்த முடிவுக்குச் சாயம் பூச விரும்பவில்லை. எது தவறாகப் போனது என்பதை விவாதிக்கும் நேரமும் இதுவல்ல.  அமேதியில் என்னை வீழ்த்திய ஸ்மிரிதி  இரானிக்கு வாழ்த்துகள். அமேதி மீது அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்.  காங்கிரஸார் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. நாம் கடுமையாகப் போரிட வேண்டும். கடின உழைப்பை அளிக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.