Published:Updated:

`நான் யாருக்கும் கேடு நினைத்ததில்லை!'- வெற்றிக்குப் பின் கண்கலங்கிய திருமாவளவன்

``நான் யாருக்கும் கேடு நினைத்ததில்லை. ஆனால் என்னைத் தோற்கடிக்க பல சக்திகள் வேலை செய்திருக்கிறார்கள். கடுமையான போட்டிக்கு இடையில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறேன்" என மன வேதனையுடன் பேசினார் தொல்.திருமாவளவன்.

`நான் யாருக்கும் கேடு நினைத்ததில்லை!'- வெற்றிக்குப் பின் கண்கலங்கிய திருமாவளவன்

சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர், சிதம்பரம், ஜெயங்கொண்டம், குன்னம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தனித்தனியாக நடைபெற்றது. இதில் அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகள் பெற்றார். இவரைவிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 5,00,229 வாக்கு பெற்று 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் சிதம்பரம் தொகுதி தேர்தல் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியருமான விஜயலட்சுமி, திருமாவளவனிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல்.திருமாவளவன், ``சிதம்பரம் தொகுதியில் பானைச் சின்னத்தில் போட்டியிட்ட என்னை வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு நன்றி. இந்த வெற்றியைச் சிதம்பரம் தொகுதி மக்களுக்குக் காணிக்கையாக்குகிறேன். யாருக்கும் நான் கேடு நினைத்ததில்லை. அறம் வெல்லும். கடுமையான போட்டிக்கு இடையில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே இந்த வெற்றி அறத்திற்குத் தர்மத்திற்குக் கிடைத்த வெற்றி. மக்களுடைய வெற்றி. எனவே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு இந்த வெற்றியை நான் காணிக்கை ஆக்குகிறேன். ஏற்கெனவே நாங்கள் திட்டமிட்டதுபோல அறிவித்ததுபோல தமிழகத்தில் சாதிவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதைத் தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர்.

`நான் யாருக்கும் கேடு நினைத்ததில்லை!'- வெற்றிக்குப் பின் கண்கலங்கிய திருமாவளவன்

40க்கு 40 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறினேன். தற்பொழுது 39 இடங்களில் 38 இடங்கள் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேபோல இடைத்தேர்தலிலும் 13 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றுள்ளது. ஆகவே அகில இந்திய அளவில் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றாலும் தமிழகம் மற்றும் கேரளாவில் அவர்களின் ஜம்பம் எடுபடவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்ததுமே அது தோற்றுப் போய் விடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிக்கை வெளியிட்டேன். எத்தனை கட்சிகள் அதில் சேர்ந்தாலும் அந்த அணி தோற்கும் என்பதை நாங்கள் சொன்னதைப்போல மக்கள் கூறியுள்ளனர். எனவே தமிழக மக்கள் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு என்றைக்கும் தமிழ் மண்ணில் சாதிவெறி இருக்கும் மதவெறி இருக்கும் கட்சிக்கு இடம் இல்லை என்று ஒட்டுமொத்த இந்தியத் தேசியத்திற்கு உணர்த்தியுள்ளது தமிழகம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எதிர் வேட்பாளருக்கு எதிராக ஒரு ஓட்டு அதிகம் பெற்றாலே வெற்றி பெற்றாகிவிடும். ஒரே ஒரு ஓட்டு வெற்றிக்கு இப்போது ஆகக்கூடுதலாக 3218 ஓட்டு எனக்குக் கிடைத்துள்ளது. இந்த அளவு குறைவாக இருக்கலாம். ஆனால் இந்த வெற்றி மகத்தான வெற்றி. மாபெரும் வெற்றி. அங்குலம் அங்குலமாகப் பகை சக்தியை விரட்டி அடித்து இந்த வெற்றியை ஈட்டி உள்ளோம்.

`நான் யாருக்கும் கேடு நினைத்ததில்லை!'- வெற்றிக்குப் பின் கண்கலங்கிய திருமாவளவன்

எனவே லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதைவிட அங்குலம், அங்குலமாக எதிரணியினரை விரட்டி முன்னேறி 3219 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த வெற்றி மக்களுடைய வெற்றி. அரசின் வெற்றி இந்த வெற்றியை எனக்கு வாரி வழங்கிய நான் நேசிக்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கும், சிறுபான்மை சமூகத்தினருக்கும், இந்த வெற்றிக்கு அரும்பாடுபட்ட திராவிட முன்னேற்றக் கட்சிகள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்" என்று கூறினார்.