Published:Updated:

`விஜயபாஸ்கர் எப்போ ராஜினாமா பண்ணுவார் கேட்டு சொல்லுங்க!’ - கலாய்க்கும் செந்தில் பாலாஜி

துரை.வேம்பையன்
`விஜயபாஸ்கர் எப்போ ராஜினாமா பண்ணுவார் கேட்டு சொல்லுங்க!’ - கலாய்க்கும் செந்தில் பாலாஜி
`விஜயபாஸ்கர் எப்போ ராஜினாமா பண்ணுவார் கேட்டு சொல்லுங்க!’ - கலாய்க்கும் செந்தில் பாலாஜி

"கரூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரலாம். அதிலும், உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர்தான் வெற்றிபெறுவார்" என்று செந்தில் பாலாஜி கொடுத்த பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

`விஜயபாஸ்கர் எப்போ ராஜினாமா பண்ணுவார் கேட்டு சொல்லுங்க!’ - கலாய்க்கும் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்றிப்பெற்றார். செந்தில் பாலாஜி 97,364 வாக்குகளும், அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளரான செந்தில்நாதன் 59,550 வாக்குகளும் பெற்றுள்ளனர். அதாவது, 37,814 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் செந்தில்நாதனை வென்றுள்ளார். அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 63 பேர் போட்டியிட்டிருந்தாலும், தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்களைத் தவிர, மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

`விஜயபாஸ்கர் எப்போ ராஜினாமா பண்ணுவார் கேட்டு சொல்லுங்க!’ - கலாய்க்கும் செந்தில் பாலாஜி

இந்த தேர்தலுக்கு முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அ.தி.மு.க மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அ.தி.மு.க கூட்டம் ஒன்றில், "அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி டெபாசிட் பெற்றால், நான் அரசியலைவிட்டே ஒதுங்கிவிடுகிறேன்" என்று அதிரடியாக பேசி இருந்தார். இந்நிலையில், 'அரவக்குறிச்சியில் அ.தி.மு.க வேட்பாளர் ஜெயிப்பது கடினம்' என்று உளவுத்துறை தகவல் கொடுத்ததால், வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 23 ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிங்கப்பூருக்கு பறந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வென்ற செந்தில் பாலாஜி பத்திரிகையாளர்களிடம் பேசினார். 

`விஜயபாஸ்கர் எப்போ ராஜினாமா பண்ணுவார் கேட்டு சொல்லுங்க!’ - கலாய்க்கும் செந்தில் பாலாஜி

"இந்த வெற்றி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்புக்கும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி. அரவக்குறிச்சி தொகுதி மக்களுக்கு விசுவாசமாக இருந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அ.தி.மு.கவினர் என்னைப்பற்றி மக்களிடம் எவ்வளவு கீழ்த்தரமாக பேசமுடியுமோ, அவ்வளவு கீழ்த்தரமாக பேசினர். ஆனால், அரவக்குறிச்சி மக்கள் உதயசூரியனுக்கு ஓட்டு போட முடிவு பண்ணிவிட்டத்தை அறியாமல், அ.தி.மு.க என்னைப்பற்றி அவதூறாக பேசினர். அதோடு, 'அரவக்குறிச்சி தொகுதியில் டெபாசிட் வாங்கினால், அரசியலை விட்டு விலக தயார்' என கூறியவர், எப்போது விலக போகிறார் என்பதை அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள்.

அநேகமாக நாளைக்கேகூட அவர் தனது பதவியை ராஜானாமா செய்யக்கூடும். அப்படி ராஜினாமா செய்தால், கரூர் தொகுதியில் இடைத்தேர்தல் வரும். அப்போதும், அங்கே தி.மு.க நிறுத்தும் வேட்பாளரே ஜெயிப்பார். உதயசூரியன் சின்னம்தான் ஜெயிக்கும்" என்றார் அதிரடியாக!.

Vikatan