Published:Updated:

டெல்லி சட்டசபை தேர்தல்: 27ஆம் தேதி விஜயகாந்த் பிரச்சாரம்!

டெல்லி சட்டசபை தேர்தல்: 27ஆம் தேதி விஜயகாந்த் பிரச்சாரம்!
டெல்லி சட்டசபை தேர்தல்: 27ஆம் தேதி விஜயகாந்த் பிரச்சாரம்!
டெல்லி சட்டசபை தேர்தல்: 27ஆம் தேதி விஜயகாந்த் பிரச்சாரம்!

சென்னை: டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து வரும் 27ஆம் தேதி முதல் ஒரு வாரம் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார்.

டெல்லி மாநில சட்டசபை தேர்தலில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் 11 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை ஏற்கனவே, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, டெல்லியில் தே.மு.தி.க. போட்டியிடும் 11 தொகுதிகளிலும் தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், அனகை முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் டெல்லியில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

##~~##
இந்நிலையில், டெல்லியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் வருகிற 27 ஆம் தேதி டெல்லி செல்கிறார். அங்கு ஒரு வாரம் முகாமிட்டு 11 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அவருடன், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கட்டாயம் பிரசாரத்தில் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பயன்படுத்தும் வாகனத்தையே டெல்லி பிரச்சாரத்துக்கும் பயன்படுத்த விஜயகாந்த் முடிவு செய்துள்ளார். இதற்காக அந்த வாகனம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகர் டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் தமிழக கட்சி என்ற அந்தஸ்தை தே.மு.தி.க. பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.