Published:Updated:

குரூப்-2 தேர்வு: வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியீடு!

குரூப்-2 தேர்வு: வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியீடு!
குரூப்-2 தேர்வு: வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியீடு!
குரூப்-2 தேர்வு: வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியீடு!

சென்னை: 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4 ஆம் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. நேர்காணல் அல்லாத 1,262 பதவிகளுக்கு தேர்வு எழுதியவர்களை தேர்ந்து எடுப்பதற்காக முதல்கட்ட கலந்தாய்விற்கு பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி கலந்¢தாய்வு 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி குறிப்பிடப்பட்டு தெரிவாளர்களுக்கு அழைப்பாணை விரைவு தபால் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய விவரங்கள் அடங்கிய கலந்தாய்விற்கான அழைப்பு கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

1,262 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஏறத்தாழ 2 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, நேர்காணல் அல்லாத பதவிகளுக்காக நடைபெற உள்ள மேற்படி கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுள் 1,262 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

##~~##
எனவே, விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட அனைவரும் குரூப்-2 தேர்வில் உள்ள பணியிடங்களுக்கு தேர்வு பெறுவதற்கான எவ்வித உரிமையும் கோர இயலாது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தேர்வர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு வருகைதரத் தவறும்பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணன், செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.