Published:Updated:

பணம் வாங்கினால் ஓராண்டு சிறை: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!

Vikatan Correspondent
பணம் வாங்கினால் ஓராண்டு சிறை: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!
பணம் வாங்கினால் ஓராண்டு சிறை: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!
பணம் வாங்கினால் ஓராண்டு சிறை: தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அன்னை தெரசா வளாகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் 39 மாவட்ட தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, தேர்தல் பணி குறித்தும்,  பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன்குமார், வாக்காளர்களுக்குபணம் கொடுத்தாலோ அல்லது வாக்காளர்கள் பணம் வாங்கினாலோ குற்றமாகும். இது தொடர்பாக புகைப்படத்துடன் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.