Published:Updated:

தேர்தல் செலவுகளை கண்காணிக்க சிறப்பு படை: பிரவீன்குமார்

Vikatan Correspondent
தேர்தல் செலவுகளை கண்காணிக்க சிறப்பு படை: பிரவீன்குமார்
தேர்தல் செலவுகளை கண்காணிக்க சிறப்பு படை: பிரவீன்குமார்
தேர்தல் செலவுகளை கண்காணிக்க சிறப்பு படை: பிரவீன்குமார்

சென்னை: தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்புப் படை அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பிரவீன்குமார் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் கூறும்போது, ''தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்காக மாவட்ட ரீதியாக வருமான வரித்துறை அதிகாரிகளை கொண்ட தனிப்படையை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

தற்போது 39 தொகுதிகளிலும் தேர்தல் செலவீன பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் வருமானவரித் துறையில் இருந்து ஒரு அலுவலரை உதவி செலவீன பார்வையாளராக நியமிக்க முடிவு செய்துள்ளோம். ஆதாரம் இல்லாமல் கொண்டு சென்றதாக, கடந்த 9 ஆம் தேதி வரை 1.72 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதிக பணத்தை கொண்டு செல்லும்போது ஆதாரங்களுடன் கொண்டு செல்ல வேண்டும்.

தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பு பூத் சிலிப்புகளை கொடுக்க திட்டமிட்டுள்ளோம். நடந்து முடிந்துள்ள வேட்பாளர் சேர்ப்பு சிறப்பு முகாமில் 9 லட்சத்து 95 ஆயிரத்து 305 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 385 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3,934 மனுக்களும் பெறப்பட்டுள்ளன" என்று அவர் கூறினார்.